‘எப்போது பட்டாசு வெடிக்கலாம் என்பதை தமிழக அரசு முடிவு செய்யலாம்!’- உச்ச நீதிமன்றம்

‘தமிழகத்திலும், தீபாவளியன்று 2 மணி நேரம் தான் பட்டாசு வெடிக்கப்பட வேண்டும்

 Share
EMAIL
PRINT
COMMENTS
‘எப்போது பட்டாசு வெடிக்கலாம் என்பதை தமிழக அரசு முடிவு செய்யலாம்!’- உச்ச நீதிமன்றம்

பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு, மக்கள் ஆரோக்கியத்துக்கு ஏற்படும் பாதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, அதன் உற்பத்தி மற்றும் விற்பனையைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்னர் தீர்ப்பளித்தது.

தீர்ப்பில் நீதிமன்றம், ‘தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டும் தான், பட்டாசு வெடிக்க வேண்டும். அதேபோல கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டின் போது இரவு 11:55 மணி முதல் 12:30 வரை பட்டாசு வெடிக்கலாம். குறைந்த அளவு சத்தம் வரும் பட்டாசுகள் மட்டுமே வெடிக்கப்பட அனுமதி வழங்கப்படுகிறது. அதுவும் உரிமம் வாங்கியுள்ள விற்பனையாளர்கள் மூலம் மட்டுமே விற்கப்பட வேண்டும்' என்று கூறியது.

தீர்ப்பின் போது நீதிமன்றம், ‘சட்ட சாசனத்தின் 21 வது பிரிவு, வாழ்க்கைக்கான உரிமையை மக்களுக்கு வழங்கியுள்ளது. இது பொது மக்களுக்கும், பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள இருவருக்கும் பொருந்தும். இருவரின் நலனையும் பாதுகாக்கும் நோக்கில் தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்தது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு தமிழக அரசு அதிருப்தி தெரிவித்திருந்தது. இந்நிலையில் நீதிமன்றம், ‘தமிழகத்திலும், தீபாவளியன்று 2 மணி நேரம் தான் பட்டாசு வெடிக்கப்பட வேண்டும். எந்த 2 மணி நேரங்களுக்கு பட்டாசு வெடிக்க வேண்டும் என்பது குறித்து அரசு முடிவு செய்து கொள்ளலாம்' என்று கூறியுள்ளது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................