This Article is From Nov 01, 2018

உச்சநீதிமன்றத்தை இனி யார் வேண்டுமானாலும் பார்வையிடலாம் - நீதிபதி ரஞ்சன் கோகாய்

வரையறக்குட்பட்ட நீதிமன்ற பகுதிகளை பார்வையிட அனுமதி உள்ளபோது, அது நிச்சயம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டுமென்று கோகாய் கூறியுள்ளார்

உச்சநீதிமன்றத்தை இனி யார் வேண்டுமானாலும் பார்வையிடலாம் - நீதிபதி ரஞ்சன் கோகாய்

உச்ச நீதிமன்ற வளாகத்தை பொதுமக்கள் பார்வையிட எல்லா சனிக்கிழமையும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனுமதி உண்டு.

New Delhi:

முதல்முறையாக இந்திய உச்சநீதி மன்றம் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. பிற சுற்றுலா தளங்கள் போல உச்சநீதிமன்றத்தையும் வழிகாட்டுதலுடன் சுற்றிப் பார்க்கலாம். இதுகுறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயி பேசுகையில், இதன் மூலம் பொதுமக்களுக்கு உச்சநீதிமன்றம் இயங்கும் முறை குறித்த ஒரு தெளிவு கிடைக்கும் என்று தெரிவித்தார்.

இதுவரை உச்சநீதிமன்றத்தினுள் மனுதாரர்கள், வழக்கறிஞர்கள் அவர்களுடைய ஊழியர்கள் மற்றும் ஊடகத்தினர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தார்கள். மற்றவர்கள் நுழைவுச் சீட்டு மற்றும் எலக்ட்ரானிக் நுழைவு அட்டை இருந்தால் மட்டுமே நுழைய முடியும்.

இனி உச்ச நீதிமன்ற வளாகத்தை பொதுமக்கள் பார்வையிட எல்லா சனிக்கிழமையும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனுமதி உண்டு. நீதிமன்ற அதிகாரிகள் பார்வையளர்களுக்கு நீதிமன்றம் மற்றும் அதன் வரலாறு குறித்து விளக்குவார்கள்.

மேலும், பார்வையாளர்களுக்கு நீதிமன்றம் குறித்த குறும்படம் திரையிடப்படும். இறுதியாக நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் அருங்காட்சியகத்தை பார்வையிடுவதோடு சுற்றுலா முடிவடையும். உச்சநீதிமன்ற கட்டடத்திற்கு இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் அடிக்கல் நாட்டினார். உச்சநீதிமன்றம் கடந்த 60 வருடங்களுக்கு முன்பு பயன்பாட்டிற்கு வந்தது.


 

.