மோடி குறித்து அவதூறு கருத்து: ராகுலுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

ரஃபேல் போர் விமானம் தொடர்பாக நீதிமன்றம் கூறாததை ராகுல் கூறுவதாகவும், இதுதொடர்பாக வரும் திங்கள்கிழமை ராகுல் பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மோடி குறித்து அவதூறு கருத்து: ராகுலுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

நீதிமன்றம் கூறாததை ராகுல் கூறிவருவதாக பாஜக அவர் மீது வழக்கு தொடர்ந்தது.

ஹைலைட்ஸ்

  • உச்சநீதிமன்றம் கூறாததை கூறியதாக ராகுல் மீது குற்றச்சாட்டு
  • தனது கருத்து குறித்து ராகுல் விளக்கம் அளிக்க ஒரு வார காலஅவகாசம்.
  • ராகுல் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த பாஜக
New Delhi:

ரஃபேல் போர் விமானம் ஒப்பந்தம் விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிரதமர் மோடி 'ஒரு திருடன்' என ரஃபேல் போர் விமானம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறாததை, ராகுல் பொய்யாக பிரசாரம் செய்து வருகிறார் என பாஜக குழு தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்திருந்தது.

இதுகுறித்து, அண்மையில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், முக்தார் அப்பாஸ் நக்வி, பாஜக ஊடகப் பிரிவு தலைவர் அனில் பாலுனி உள்ளிட்டோர் அடங்கிய பாஜக குழு தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்.

முன்னதாக, பாஜக எம்.பி மீனாட்சி லேகி, ரஃபேல் போர் விமானம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறாததை, ராகுல் பொய்யாக கூறிவருவதாகவும் அவர் மீது குற்றவியல் அவதூறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்திருந்தார்.

ஏற்கனவே ராகுலுக்கு எதிராக பாஜக அளித்த புகார்கள் மீது தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தற்போது மீண்டும் பாஜக புகார் அளித்திருந்தது.

இந்நிலையில், பாஜக எம்.பி மீனாட்சி லேகி தொடர்து வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில், பொதுக்கூட்டங்களிலும், ஊடகங்களிலும் ராகுல் கூறுவது நீதிமன்றம் தெரிவிக்காத கருத்தாக உள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக ராகுல் காந்தி வரும் திங்களன்று ராகுல் விளக்கம் அளிக்க வேண்டும் என அவருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முன்னதாக, அமேதி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இது தொடர்பாக பேசிய ராகுல், நான் உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஒட்டு மொத்த நாடே காவலாளி திருட்டில் ஈடுபட்டுள்ளார் என்று கூறி வரும் நிலையில், உச்சநீதிமன்றம் அதற்கு தகுந்தபடி நீதியின் பக்கம் நின்றுள்ளது.
 

More News