தமிழ் ராக்கர்ஸில் வெளியானது ரஜினியின் ’பேட்ட’ - அதிர்ச்சியில் படக்குழுவினர்!

’பேட்ட’ திரைப்படம் தமிழ் ராக்கர்ஸில் வெளியாகி உள்ளதால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்

 Share
EMAIL
PRINT
COMMENTS
தமிழ் ராக்கர்ஸில் வெளியானது ரஜினியின் ’பேட்ட’ - அதிர்ச்சியில் படக்குழுவினர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று வெளியான 'பேட்ட' திரைப்படம் தமிழ் ராக்கர்ஸில் வெளியாகி உள்ளதால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ‘பேட்ட' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நடிகர்கள் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக் போன்ற பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள 'பேட்ட' படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இன்று அதிகாலையிலேயே ரசிகர்களின் ஆரவாரத்துடன் ‘பேட்ட' சிறப்பு காட்சிகள், திரையிடப்பட்டன.

இதற்காக, நேற்றிரவு முதலே திரையரங்குகளில் குவியத் தொடங்கிய ரஜினி ரசிகர்கள் தப்பாட்டம், கரகாட்டம், மேளம், தாளம் என ஆடி பாடி கொண்டாடியபடியே முதல் காட்சியை பார்த்து ரசித்தனர்.

மேலும் படிக்க - ‘பேட்ட' குறித்து கார்த்திக் சுப்பராஜ் பேட்டி

'பேட்ட' படம் குறித்து அதன் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஒவ்வொரு பேட்டியிலும் கூறும்போது, ‘பேட்ட மாஸ் படமாக இருக்கும். ரஜினிக்காக விசே‌ஷமாக எழுதப்பட்ட தனித்துவமான கதை. ரசிகர்கள் விரும்பும் மாஸ் காட்சிகள் படத்தில் இருக்கும்'' என்று கூறி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறார். மேலும் சமூக வலைத் தளங்களில் படத்தின் விமர்சனங்களும் பாசிட்டிவாக வந்த வண்ணம் உள்ளது.

மேலும், இன்று, நாளையை (11ஆம் தேதி) தவிர்த்து, 12ஆம்தேதி முதல் 17ஆம் தேதி வரை தொடர்ச்சியாக 6 நாட்கள் பொங்கல் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தியேட்டர்களில் வசூல் எகிறும் என்றும் படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருந்தனர்.

மேலும் படிக்க - 'பேட்ட' விமர்சனம்

இந்நிலையில், படம் வெளியான முதல் நாளான இன்று அனைத்துக் காட்சிகளும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் 'பேட்ட' திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் இணைய தளத்தில் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க - அதிர வைக்கும் தமிழ்ராக்கர்ஸ்! - 'விஸ்வாசமும்' வெளியானது!

ஏற்கனவே 'பேட்ட' படத்தை இணைய தளங்களில் வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. எனினும் இணையத்தில் படம் வெளியானதால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 

மேலும் படிக்க - 'விஸ்வாசம்' திரைப்பட விமர்சனம்சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................