எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்

மகள் சவுந்தர்யாவின் திருமண விழாவில் பங்கேற்றவர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்

ரஜினி மகள் சவுந்தர்யாவின் திருமணம் நேற்று நடைபெற்றது.


ஹைலைட்ஸ்

  1. ரஜினியின் 2-வது மகளுக்கு திருமணம் நேற்று நடைபெற்றது
  2. அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்
  3. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு ரஜினி நன்றி கூறியுள்ளார்.

மகள் சவுந்தர்யாவின் திருமண விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். 

ரஜினியின் 2-வது மகள் சவுந்தர்யா - விசாகன் ஆகியோரது திருமாணம் நேற்று நடைபெற்றது. ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இந்த திருமணத்தில் அரசியல் பிரபலங்கள், திரையுலக நட்சத்திரங்கள் என பலரும் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்தினர்.

இந்த நிலையில், திருமண விழாவில் பங்கேற்றவர்களுக்கு நன்றி தெரிவித்து ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது-

என் மகள் சௌந்தர்யா, மணமகன் விசாகன் திருமணத்திற்கு வருகை தந்து வாழ்த்திய மரியாதைக்குரிய மாண்புமிகு முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், எதிர்க்கட்சி தலைவர் திரு.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷணன், முகேஷ் அம்பானி குடும்பத்தினர், திருநாவுக்கரசர், அமர்நாத், கமல்ஹாசன் மற்றும் நண்பர்கள், உறவினர்கள், திரையுலக பிரமுகர்கள், ஊடக நண்பர்கள், காவல் துறை நண்பர்கள், திருமண விழாவிற்கு வந்து மணமக்களை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................