தூக்கு மாட்டிக் கொண்ட 5-ம் வகுப்பு மாணவர்!! பெற்றோர் அதிர்ச்சி!

தூக்கு மாட்டிக் கொண்ட மாணவர் பிரவீன் குமார் பள்ளி விடுதியில் தங்கி பயின்று வந்தார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
தூக்கு மாட்டிக் கொண்ட 5-ம் வகுப்பு மாணவர்!! பெற்றோர் அதிர்ச்சி!

ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் சம்பவம் நடந்துள்ளது.


Vijayawada, Andhra Pradesh: 

ஆந்திராவில் 5-ம் வகுப்பு மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பிரவீன் குமார் என்ற மாணவர் கிருஷ்ணா மாவட்டத்தின் ரஜுவாரி கோலகுடம் கிராமத்தை சேர்ந்தவர். இவர் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். 

இதற்காக அவர் 2 நாட்களுக்கு முன்பாக பள்ளி விடுதியில் சேர்ந்துள்ளார். அங்கு அவருக்கு இன்னும் அட்மிஷன் போடவில்லை என தெரிகிறது. 

இந்த நிலையில் இன்று காலை தனது மாமாவுக்கு போன் செய்து அவரை விடுதிக்கு வருமாறு அழைத்துள்ளார். அவர் வருவதற்கு முன்பாக மாணவர் பிரவீன் குமார் தூக்கு மாட்டிக் கொண்டார். இதைப் பார்த்த சக மாணவர்கள் விடுதி வார்டனுக்கு தகவல் அளித்தனர். 

இதையடுத்து அங்கு வந்த வார்டன் மற்றும் பணியாளர்கள், சிறுவன் பிரவீன் குமாரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் உடல் நலம் தேறி வருவதாகவும், உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

சிறுவர் பிரவீன் குமார் தூக்கு மாட்டிக் கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. விடுதியில் தங்குவது பிடிக்காததால் அவர் தற்கொலைக்கு முயற்சித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................