This Article is From Jun 15, 2020

இந்த அறிகுறி உங்களுக்கு இருந்தால் கொரோனா இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்!

கொரோனா பாதித்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதை, ஆய்வின் முடிவுகள் நமக்கு தெரியப்படுத்துகின்றன. அதிலும், இதய பிரச்னை, இரத்த  அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளிட்டவை இருந்தால் பிரச்னை இன்னும் அதிகமாக இருக்கும். 

இந்த அறிகுறி உங்களுக்கு இருந்தால் கொரோனா இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது.

New Delhi:

கொரோனா பாதித்ததற்கான புதிய அறிகுறி குறித்து மத்திய அரசு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி கொரோனா பாதித்தவர்களுக்கு வாசனை மற்றும் சுவை அறியும் திறன் இல்லாமல் போகும் என்று கூறப்பட்டுள்ளது.  

ஏற்கெனவே கொரோனா பாதித்தவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல், மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை அறிகுறிகளாக இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இருப்பினும், அறிகுறியே இல்லாமல் பலபேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.  இந்த சூழலில் சுவை மற்றும் நறுமணம் அறியும் திறன் இல்லாமல் போவது கொரோனா பாதிப்பின் அறிகுறி என்று மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. 

கொரோனா பாதித்தவர்கள் இருமினாலோ, தும்மினாலோ அவர்களிடமிருந்து  கொரோனா மற்றவர்களுக்கு பரவும். 

கொரோனா பாதித்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதை, ஆய்வின் முடிவுகள் நமக்கு தெரியப்படுத்துகின்றன. அதிலும், இதய பிரச்னை, இரத்த  அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளிட்டவை இருந்தால் பிரச்னை இன்னும் அதிகமாக இருக்கும். 

இதேபோன்று கொரோனா பாதித்தவர்கள் தும்மும்போதும், இருமும்போதும் வெளியாகும் நுண்ணிய நீர்த்துளிகள், காற்று மற்றும் திடப்பொருட்களில்  விழுந்து  அப்படியே இருக்கும். இதனை நாம் கைகளால் தொட்டு மூக்கு, வாய் அல்லலது கண்களில் வைக்கும்போது கொரோனா பரவி விடும். 

தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரையில் கொரோனா பாதிப்பு அச்சம் விலகப்போவதில்லை.

இதற்கிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 3 லட்சத்தை தாண்டியுள்ளளது. மிக அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகியவை உள்ளன. 

.