“அப்ப்ப்ப்ப்பா…”- இப்படியொரு கழுகு படத்தைப் பார்த்திருக்கீங்களா..?

ஸ்டீவ் பிரோ-வின் இந்த ‘கழுகு படம்’ ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பல லைக்ஸ்களை குவித்து வருகிறது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
“அப்ப்ப்ப்ப்பா…”- இப்படியொரு கழுகு படத்தைப் பார்த்திருக்கீங்களா..?

கனடாவின் ராப்டர் கன்சர்வன்சியில் ஸ்டீவ், கழுகு ஒன்று தண்ணீர் மேல் பறக்கும் காட்சியைப் படமாக எடுத்துள்ளார்


புகைப்படம் அல்லது நிழற்படம் என்பதை யார் வேண்டுமானால் எடுக்கலாம். ஆனால் சில ஸ்பெஷல் புகைப்படங்களை சில அசாத்திய போட்டோகிராஃபர்ஸால் மட்டுமே எடுக்க முடியும். அப்படிப்பட்ட சில படங்களை நாம் பார்க்கும்போது, ‘எப்படி எடுத்திருக்காரு பாருப்பா' என்று மெய்சிலிர்ப்பதும் உண்டு. அப்படியொரு புகைப்படத்தைத்தான் கனடாவைச் சேர்ந்த புகைப்படக்காரர் ஸ்டீவ் பிரோ எடுத்துள்ளார். 

கனடாவின் ராப்டர் கன்சர்வன்சியில் ஸ்டீவ், கழுகு ஒன்று தண்ணீர் மேல் பறக்கும் காட்சியைப் படமாக எடுத்துள்ளார். மே மாதத் தொடக்கத்தில் இந்தப் புகைப்படத்தை அவர் எடுத்துள்ளார். கழுகு ஒன்று தண்ணீருக்கு அருகில் பறக்கும்போது அதன் துள்ளியமான பிரதிபலிப்பை ஸ்டீவ் படமாக்கியுள்ளார். அவரின் இந்த மெர்சல் படம்தான் சில நாட்களாக இணைய வைரலாக வளம் வந்து கொண்டிருக்கிறது. 

இந்தப் படத்தை எடுத்தது குறித்து சிபிசி செய்திக்குப் பேசியுள்ள ஸ்டீவ், “கடந்த ஆண்டும் நான் ராப்டர் கன்சர்வன்சிக்குச் சென்றேன். அப்போதே பறவை ஒன்றை இப்போது படம் எடுத்திருப்பது போல் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், சென்ற ஆண்டு படம் எடுக்கும் அளவுக்கான சரியான இடம் எனக்கு அமையவில்லை. ஆனால் இந்த ஆண்டு, சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தேன். படத்தை க்ளிக் செய்தேன்” என்கிறார் பெருமையுடன்.

ஸ்டீவ் பிரோ-வின் இந்த ‘கழுகு படம்' ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பல லைக்ஸ்களை குவித்து வருகிறது. ரெடிட் போன்ற தளங்களிலும் ஸ்டீவ் வைரலாக மாறியுள்ளார். 

Click for more trending news


NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................