தீவிரவாதியே திரும்பி போ... எம்.பி பிரக்யா சிங் தாகூரை நோக்கி கோஷமிட்டு வழியனுப்பி வைத்த மாணவர்கள்

நான் ஒரு 'பயங்கரவாதி' என்று என்.எஸ்.யு.ஐ உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர். இந்த முழக்கங்கள் சட்டவிரோதமானவை, இழிவானவை. அரசியலமைப்பு பதவியில் இருக்கும் ஒருவரை துஷ்பிரயோகம் செய்வது குற்றமாகும்.

தீவிரவாதியே திரும்பி போ... எம்.பி பிரக்யா சிங் தாகூரை நோக்கி கோஷமிட்டு வழியனுப்பி வைத்த மாணவர்கள்

தான் முன்பதிவு செய்த இருக்கை தனக்கு வழங்கப்படவில்லை என விமான ஊழியர்கள் மற்றும் சக பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்

ஹைலைட்ஸ்

  • BJP's Pragya Thakur waded into yet another controversy
  • Bhopal students raised slogans against her when she tried to meet them
  • "I'll consult legal experts and take action," Pragya Thakur said
Bhopal:

தீவிரவாதியே திரும்பி போ என போபால் எம்பி பிரக்யா தாகூரை முற்றுகையிட்டு போபால் பல்கலைக்கழக மாணவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு எழுந்தது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ளது மகன்லால் சதுர்வேதி பல்கலைக்கழகம்.

இங்கு வருகை பதிவேடு குறைவாக உள்ளதால் மாணவர்கள் சிலரை தேர்வு எழுத பல்கலைக்கழக நிர்வாகம் தேர்வு எழுத அனுமதி மறுத்துவிட்டது. இதை கண்டித்து செவ்வாய்க்கிழமை இரவு முதல் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பல்கலைக்கழகத்தில் வருகைபதிவேடு பிரச்சினை குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைச் சந்திக்கச் சென்றார் பிரக்யா தாகூர். மாணவர்கள் அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். 

"நான் ஒரு 'பயங்கரவாதி' என்று என்.எஸ்.யு.ஐ உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர். இந்த முழக்கங்கள் சட்டவிரோதமானவை, இழிவானவை. அரசியலமைப்பு பதவியில் இருக்கும் ஒருவரை துஷ்பிரயோகம் செய்வது மற்றும் ஒரு பெண் சன்யாசி (துறவியை) அவமதிப்பது தேச விரோதமானது.

இது குறித்து நான் நிச்சயமாக செயல்படுவேன். அராஜக கூறுகள் மீது நாம் கருணை காட்ட முடியாது, இல்லையெனில் அவை எண்ணிக்கையில் வளரும். அவர்களுக்கு எதிரான நடவடிக்கை அவசியம்," என்று அவர் கூறினார்.

டெல்லியிலிருந்து போபால் செல்லும் தனியார் விமானத்தில் ஏறிய பிரக்யா தாகூர், தான் முன்பதிவு செய்த இருக்கை தனக்கு வழங்கப்படவில்லை என விமான ஊழியர்கள் மற்றும் சக பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

முன்பதிவு செய்யப்பட்ட இருக்கை மற்றும் முதல் வகுப்பு வசதி ஆகியவை தரப்படவில்லை என அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது பயணிகளும் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.