‘ராக்கி’ கட்டியதால் மாணவன் தற்கொலை முயற்சி; திரிபுரா பள்ளியில் பரபரப்பு

உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட மாணவன், பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

 Share
EMAIL
PRINT
COMMENTS
‘ராக்கி’ கட்டியதால் மாணவன் தற்கொலை முயற்சி; திரிபுரா பள்ளியில் பரபரப்பு
Agartala: 

திரிபுரா மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளியில், ராக்கி கட்டியதால் பள்ளி மாடியில் இருந்து தற்கொலை முயற்சி செய்த மாணவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இது குறித்து அகர்தலா காவல் துறையினர் கூறுகையில், 18வயதாகும் திலீப் என்ற மாணவனின் பெற்றோரையும், அவரது தோழியின் பெற்றோரையும் பள்ளிக்கு வரச் சொல்லி தலைமை ஆசிரியர் அழைத்துள்ளார்.

அப்போது, பெற்றோர் முன்னிலையில், திலீப்பிற்கு ராக்கி கட்டுமாறு மாணவியை ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதற்கு இருவரும் மறுப்பு தெரிவித்துள்ளனர். திடீரென யாரும் எதிர்பாராத வகையில், பள்ளியின் இரண்டாவது மாடிக்கு சென்ற திலீப், அங்கிருந்து குதித்துள்ளார்

உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட மாணவன், பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................