This Article is From Sep 10, 2018

ஸ்டெர்லைட் குறித்து முடிவெடுக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்ற அமர்வு, தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு உண்மைத் தன்மை மற்றும் பராமரிப்பு குறித்து முடிவெடுக்க உத்தரவிடுவதாக தெரிவித்தது

ஸ்டெர்லைட் குறித்து முடிவெடுக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா தொடர்ந்துள்ள வழக்கில், தமிழக அரசு முன் வைத்துள்ள பிரச்சனைகளின், உண்மைத் தன்மை பற்றி தேசிய பசுமை தீர்ப்பாயம் முடிவெடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த 3 நபர் குழு, சுற்றுச் சூழல் பாதிப்புகள் மற்றும் மற்ற பிரச்சனைகளை ஆராய்ந்து அளிக்கும் அறிக்கையை சமர்ப்பித்த பிறகு, அவற்றை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, நீதிபதிகள் நாரிமன் மற்றும் இந்து மல்ஹோத்ரா, அடங்கிய அமர்வு, தாங்கள் ஏற்கெனவே தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு இது குறித்து உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தது. ஆனால், ஆகஸ்ட் 20-ம் தேதி தாங்கள் வழங்கிய இந்த உத்தரவு தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவில் இல்லாததால், மீண்டும் நினைவுபடுத்துவதாக உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.

வேதாந்தா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுந்தரம், தேசிய பசுமை தீர்ப்பாயம் இரண்டு விஷயங்களிலும் முடிவெடுத்தால் தங்களுக்கு பிரச்சனை இல்லை என்றார்.

தாங்கள் நீதிமன்றத்தின் ஆணையை மதிக்க விரும்புகிறேம். உண்மைத் தன்மை மற்றும் பராமரிப்பு குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முன் கூறியதாகவும், ஆனால் அதை மீறி, கமிட்டி அமைத்து உத்தரவிட்டதாக சுந்தரம் தெரிவித்தார்.

மேலும், கமிட்டி இல்லாமல், இந்த இரண்டு விஷயத்தை பசுமை தீர்ப்பாயம் தனியாக விசாரிக்க வேண்டும் என சுந்தரம் கோரினார்.

அமைக்கப்பட்ட கமிட்டிக்கு ஏதேனும் ஆட்சேபம்   இருக்கிறதா என்று அமர்வு கேட்டது. ஆனால் அதற்கு அரசு தரப்பில் எந்த ஆட்சேபனமும் இல்லை என்றது. எனவே நீதிமன்ற அமர்வு, தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு உண்மைத் தன்மை மற்றும் பராமரிப்பு குறித்து முடிவெடுக்க உத்தரவிடுவதாக தெரிவித்தது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.