எந்த வழக்குகளும் காரணமின்றி நீக்கப்படுவதில்லை: தலைமை நீதிபதி

ஒவ்வொரு வழக்கும் தொடங்குவதற்கு முன்பும் 20லிருந்து 30 நிமிடம் வரை எடுத்துக்கொள்வதாக அக்.2ஆம் தேதி முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
எந்த வழக்குகளும் காரணமின்றி நீக்கப்படுவதில்லை: தலைமை நீதிபதி

உயர்நீதிமன்றும் பழ வழக்குகளை நிலுவையில்லாமல் விசாரிக்கவே வரும்புவதாக நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்தார்.

New Delhi: 

உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்படும் வழக்குகள் எதையும், நீக்காமல், அனைத்து வழக்குகளுக்கும் தீர்ப்பளிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற ரஞ்சன் கோகாய் வழக்குகள் வரிசைப்படுத்தப்படுவது குறித்து விளக்கமளித்தார்.

தூக்கு தண்டனை மற்றும் தண்டனையிலிருந்து ஒருவரை விடுவிப்பது, இந்த இரண்டிற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறினார்.

நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறுகையில், உச்சநீதிமன்றம் ஒரு நாளில் நிறைய வழக்குகளை விசாரிக்கவே விரும்புகிறது. இருப்பினும், நேரமின்மையால் எல்லா வழக்குகளையும் விசாரிக்க முடிவதில்லை. ஆனால் எந்த வழக்குகளும் காரணமின்றி நீக்கப்படுவதில்லை என்றார்.
 
NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................