தேசிய புள்ளியியல் ஆணைய தலைவர் உள்பட 2 உறுப்பினர்கள் ராஜினாமா

தேசிய புள்ளியியல் ஆணைய செயல் தலைவர் பி.சி.மோகனன் மற்றும் உறுப்பினரான பேராசிரியர் ஜே.வி. மீனாட்சி ஆகியோர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

வேலை வாய்ப்பு மற்றும் வேலை வாய்ப்பின்மை குறித்த தகவல்களை புள்ளியியல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

New Delhi:

தேசிய புள்ளியியல் ஆணையத்தின் செயல் தலைவரான பி.சி. மோகனன் மற்றும் உறுப்பினரான ஜே.பி. மீனாட்சி ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். வேலை வாய்ப்பு மற்றும் வேலை வாய்ப்பின்மை குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிடாமல் இருந்தது. இந்த விவகாரத்தில்  மோகனன் அதிருப்தி வெளியிட்டிருந்தார். 

இந்த நிலையில் மோகனன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து என்.டி.டி.வி.-க்கு அளித்த பேட்டியில், தாங்கள் ஒரு பொருட்டாக மதிக்கப்படவில்லை என்றும், கடந்த சில  மாதங்களாக தாங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்ததாகவும் கூறினார். 

மோகனனை தவிர்த்து புள்ளியியல்  ஆணைய உறுப்பினராக இருந்த ஜே.வி. மீனாட்சியும் பதவியில் இருந்து விலகியுள்ளார்.  இந்த நிலையில் புள்ளியியல் துறை செயலர் பிரவின் ஸ்ரீவஸ்தவா  ராஜினாமா செய்த இருவரையும் கூட்டத்திற்கு அழைத்துள்ளார்.  
 

mg4309h

தற்போது புள்ளியியல் ஆணையத்திற்கு 2உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். அவர்கள் தலைமை புள்ளியியல் அதிகாரி பிரவின் ஸ்ரீவஸ்தவா மற்றும் நிதிய ஆயோகின் அமிதாப் கன்ட். 

இந்த விவகாரம் குறித்து பி.சி. மோகனன் என்.டி.டி.வி.-க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது-

புள்ளியியல் ஆணையம் சிறப்பாக செயல்படவில்லை என்பதை கண்டறிந்தோம். கடந்த சில மாதங்களாக நாங்கள் புறக்கணிக்கப்பட்டதைப் போன்று உணர்ந்தோம்.  அல்லது நாங்கள் ஒரு பொருட்டாக மதிக்கப்படவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார். வேலை வாய்ப்பு குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிடாமல் இருக்கிறது. இதுவும் பதவி விலகுவதற்கான ஒரு காரணமாக மோகனன் தெரிவித்தார். வேலை வாய்ப்பு குறித்த விவரங்களை தேசிய சர்வே அலுவலகம் வெளியிட்டு வருகிறது. 2017 - 18-ம் ஆண்டுக்கான விவரங்களை வெளியிட புள்ளியியல் ஆணையம் அனுமதி அளித்தது. இருப்பினும் மத்திய அரசு அந்த விவரங்களை வெளியிடவில்லை.

தேசிய புள்ளியியல் ஆணையத்திற்கு மொத்தம் 7 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். இருவரும் ராஜினாமா செய்வதற்கு முன்பாக 3 பணியிடங்கள் காலியாக இருந்தது. தற்போது இருவர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து காலிப்பணியிடங்கள் 5-ஆக உயர்ந்துள்ளது.