This Article is From Sep 19, 2018

“விரக்தி காரணமாக மு.க. ஸ்டாலின் ஊழல் புகார்களை கூறுகிறார்” – அதிமுக விமர்சனம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அதிமுக நாளேடான “நமது புரட்சித் தலைவி அம்மா” கடுமையாக விமர்சித்துள்ளது.

“விரக்தி காரணமாக மு.க. ஸ்டாலின் ஊழல் புகார்களை கூறுகிறார்” – அதிமுக விமர்சனம்

முதல்வராக ஸ்டாலின் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததால் ஸ்டாலின் விரக்தியில் உள்ளதாக அதிமுக விமர்சனம்

Chennai:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுக அரச விமர்சித்து பேசி வருகிறார். சில தினங்களுக்கு முன்பாக பேசி அவர், தமிழக வரலாற்றில் இதுபோன்ற ஒரு ஊழல் அரசை மக்கள் பார்த்ததில்லை என்றும், மத்திய அரசின் அடிமையாக மாநில அதிமுக அரசு உள்ளதாகவும் கூறினார்.

இதற்கு அதிமுகவின் நாளேடான நமது புரட்சித் தலைவி அம்மா இதழில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான கட்டுரையில் திமுக ஆட்சியில் ஏற்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும் எழுச்சியை ஏற்படுத்தி வருகிறார்கள் எனறு அந்த இதழ் கூறியுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக அரசு கவிழ்ந்து விடும் என்று நினைத்தவர்களும், கட்சியை உடைத்தவர்களும் தற்போது விரக்தியில் இருப்பதாக அதிமுக கட்சி நாளேடு தெரிவித்துள்ளது.

முதல்வராக பலமுறை மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததால் ஸ்டாலின் விரக்தியில் இருப்பதாகவும், இதனால்தான் அதிமுகவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை அவர் கூறி வருவதாகவும் கட்டுரையில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2006-11 வரையிலான திமுக ஆட்சியின்போது இலங்கை தமிழர் பிரச்னை, நில அபகரிப்பு மோசனை உள்ளிட்டவை நடந்ததாக அதிமுக கட்சி இதழ் குற்றம்சாட்டியுள்ளது.

எதிர்க்கட்சியான திமுக ஆளும் அதிமுக அரசு ஊழலில் திளைப்பதாக குற்றம்சாட்டி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நேற்று நடத்தியது. இதில் முதல்வரின் சொந்த மாவட்டான சேலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

.