''அண்டை நாடுகளுடன் நட்புறவு; சர்வதேச பிரச்னையில் நடுநிலைமை வகிப்போம்'' - இலங்கை அதிபர்

2005-ல் அரசியல் களத்துக்கு திரும்பிய கோத்தபய ராஜபக்சே, அண்ணன் மகிந்தா ராஜபக்சேவின் தேர்தல் பிரசாரத்திற்கு தளபதியாக செயல்பட்டார். தேர்தலில் மகிந்தா வெற்றி பெற, பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பு கோத்தபயவுக்கு அளிக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கையால் 2009-ல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான சண்டையில் இலங்கை ராணுவத்தை வெற்றி பெறவைத்தார். கோத்தபய. அவரை நாட்டின் ஹீரோவாக பெரும்பான்மை சிங்கள புத்த மக்கள கொண்டாடி வருகின்றனர். 

''அண்டை நாடுகளுடன் நட்புறவு; சர்வதேச பிரச்னையில் நடுநிலைமை வகிப்போம்'' - இலங்கை அதிபர்

மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் பாதுகாப்பு தொடர்பான படிப்பில் 1983-ல் பட்டம் முடித்துள்ளார்.

Colombo:

அண்டை நாடான இலங்கையின் புதிய அதிபரான கோத்தபய ராஜபக்சே அண்டை நாடுகளுடன் நட்புறவு வகிப்போம் என்றும், சர்வதேச விவகாரங்களில் எந்தப் பக்கமும் சாயமாட்டோம் என்றும் கூறியுள்ளார். 

இந்திய பெருங்கடலில் அமைந்திருக்கும் இலங்கை மிகப்பெரும் பொருளாதார மையமாக திகழ்கிறது. அங்கு சீனா பல்வேறு அடிப்படை கட்டமைப்புகளை மேற்கொண்டு வருவது என்பது, இந்தியாவுக்கு சவாலை ஏற்படுத்தும் என வல்லுனர்கள் கருதுகின்றனர். 

இப்படிப்பட்ட சூழலில் இலங்கையின் புதிய அதிபராக இலங்கை மக்கள் கட்சியின் கோத்தபய ராஜபக்சே 52.25 சதவீத வாக்குகளை பெற்று பொறுப்பேற்றுள்ளார். அவரை எதிர்த்து களத்தில் நின்ற சாஜித் பிரேமதாசாவுக்கு 41.99 சதவீத வாக்குகள் கிடைத்தன. வாக்கு வித்தியாசம் சுமார் 13 லட்சம். 

அதிபராக பொறுப்பேற்ற பின்னர் அனுராதாபுரம் மாளிகையில் பேசிய கோத்தபய ராஜபக்சே, வெளிநாட்டு கொள்கைகள், உள்நாட்டு வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து பேசினார். அண்டை நாடுகளுடன் நட்புறவு, சர்வதேச விவகாரங்களில் நடு நிலைமை வகிப்பது என ஏற்கனவே உள்ள வெளியுறவு கொள்கைகள் பின்பறப்படும் என கோத்தபய தெரிவித்தார். 

இலங்கையில் 30 ஆண்டுகளாக நடந்து வந்த விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போர், கோத்தபய ராஜபக்சே பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோதுதான் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதனால், அவரை பெரும்பான்மையாக வசிக்கும் சிங்கள புத்த இன மக்கள் 'போர் வீரராக' கொண்டாடி வருகின்றனர். இருப்பினும், சிறுபான்மை தமிழர்களுக்கு கோத்தபய மேல் நம்பிக்கை ஏதும் இல்லை. 

கோத்தபயவை பொறுத்தவரையில் அசாமில் உள்ள போர்க்கலைப் பள்ளியில் கடந்த 1980-ல் படித்து பட்டம் பெற்றவர். மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் பாதுகாப்பு தொடர்பான படிப்பில் 1983-ல் பட்டம் முடித்துள்ளார். 

அண்ணன் மகிந்தா ராஜபக்ச அரசில் பாதுகாப்புத்துறை அமைச்சராக கடந்த 2005 முதல் 2014 வரையில் பணியாற்றிய அனுபவம் கோத்தபயவுக்கு உண்டு. 2012 மற்றும் 2013-ல் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். 

1949 ஜூன் 20-ம்தேதி மதாரா மாவட்டத்தில் பிறந்தவர் கோத்தபய ராஜபக்சே. 1971-ல் இலங்கை ராணுவத்தில் சேர்ந்த அவர், 1991-ல் துணை தளபதியாக பொறுப்புக்கு வந்தார். 1992-ல் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார். 

ராணுவத்தில் பணியாற்றிய 20 ஆண்டுகளில் 3 முறை வீர தீரத்துக்கான பதக்கங்களை இலங்கை அதிபர்கள் ஜெயவர்த்தனே, ரணசிங் பிரேமதாசா, டி.பி. விஜேதுங்கா ஆகியோரிடம் இருந்து பெற்றுக் கொண்டார். 

2005-ல் அரசியல் களத்துக்கு திரும்பிய கோத்தபய ராஜபக்சே, அண்ணன் மகிந்தா ராஜபக்சேவின் தேர்தல் பிரசாரத்திற்கு தளபதியாக செயல்பட்டார். தேர்தலில் மகிந்தா வெற்றி பெற, பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பு கோத்தபயவுக்கு அளிக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கையால் 2009-ல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான சண்டையில் இலங்கை ராணுவத்தை வெற்றி பெறவைத்தார். கோத்தபய. அவரை நாட்டின் ஹீரோவாக பெரும்பான்மை சிங்கள புத்த மக்கள கொண்டாடி வருகின்றனர். 
 (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Listen to the latest songs, only on JioSaavn.com