கோத்தபய ராஜபக்சேவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

இலங்கை பொதுத்தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.51.9 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் கோத்தபய ராஜபக்சேவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கோத்தபய ராஜபக்சேவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

கோத்தபய ராஜபக்சேவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

New Delhi:

இலங்கையில் 8வது அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் கோத்தபய ராஜபக்சே, ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகனும், வீட்டு வசதி மற்றும் கலாசார விவகார அமைச்சருமான சஜித் பிரேமதாசா ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக போட்டியிட்டனர். 

இலங்கை பொதுத்தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.51.9 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் கோத்தபய ராஜபக்சேவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

பிரதமரின் வாழ்த்துச் செய்தியில்:

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு எனது வாழ்த்துகள். இந்தியா, இலங்கை இடையிலான நல்லுறவு, அமைதி, வளம், வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் இணைந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன் என்று தெரிவித்துள்ளார். 

Newsbeep

இதற்கு கோத்தபய ராஜபக்சே நன்றி தெரிவித்துள்ளார். “பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இரு நாடுகளும் வரலாறு மற்றும் நம்பிக்கைகளுக்கு கட்டுப்பட்டவை. அதனை வலுப்படுத்தவும் உங்களை சந்திக்கும் காலத்தை எதிர்நோக்கியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.