This Article is From Nov 17, 2019

இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சே தேர்வு

Sri Lanka Election: 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் விடுதலை புலிகளை ராணுவத்தால் கொன்றழித்த கோத்தபய ராஜபக்சே இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சே தேர்வு

Sri Lanka Election: சிங்களர்கள் மற்றும் புத்த பிட்சுகளின் ஆதரவு பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • Gotabaya Rajapaksa, an ex-army officer, is Mahinda Rajapaksa's brother
  • His main rival-Sajith Premadasa of the ruling party-conceded the race
  • Elections are being held in Sri Lanka seven months after terror attacks
Colombo:

10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் விடுதலை புலிகளை ராணுவத்தால் கொன்றழித்த  கோத்தபய ராஜபக்சே இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். 

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஆளும்கட்சி வேட்பாளர் ஆளும் ஜனநாயக தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமேதாசா தோல்வியடைந்தார். இலங்கையில் அதிபரை தேர்வு செய்யும் பொதுத்தேர்தல் நேற்று நடந்தது.

இலங்கை தேர்தலில் மொத்தம் 35 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். இதில் பொதுஜனக் கட்சி சார்பில் கோத்தபய ராஜபக்சே ஆளும் ஜனநாயக தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமேதாசாவிடையே கடும் போட்டி நிலவியது.

இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு நடைபெறும் தேர்தல் என்பதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்டப்போரை முன்னின்று நடத்தியவர். 2005-15 வரையிலான ராஜபக்சேவின் ஆட்சியில் ராணுவத்தை திறம்பட நடத்தியவர். ராஜபக்சேவின் தம்பி. சிங்களர்கள் மற்றும் புத்த பிட்சுகளின் ஆதரவு பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளனர்.

கோத்தபய ராஜபக்சேவின் தந்தை விடுதலை புலிகளின் தற்கொலை படையினரால் கொல்லப்பட்டார். அதனால், தான் பயங்கரவாதத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டவர் என்று கூறிக் கொண்டு 40,000 தமிழ் மக்களை ராணுவத்தால் கொன்றழித்தார். அப்போதைய சூழலில் ராணுவத்தை வழிநடத்தியவர் கோத்தபய ராஜபக்சே. தமிழர்கள் வாழும் பகுதிகளில் கோத்தபய ராஜபக்சேவுக்கு 5 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன. அங்கு சஜித் பிரேமதாசாவுக்கு 90 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

.