இலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி: முகத்தை மூட தடைபோட்ட அதிபர்!

Sri Lanka Blasts: ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து, அந்நாட்டு அரசு தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது

 Share
EMAIL
PRINT
COMMENTS
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி: முகத்தை மூட தடைபோட்ட அதிபர்!

Sri Lanka Blast:இலங்கையின் மொத்த ஜனத்தொகை 2.1 கோடியாகும். இதில் 10 சதவிகிதத்தினர் இஸ்லாமியர்கள் ஆவர்


ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து, அந்நாட்டு அரசு தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, பொது இடங்களில் முகத்தை மூடுவதற்குத் தடை போட்டுள்ளார்.

இது குறித்து அதிபர் சிறிசேனா வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘நாட்டின் பாதுகாப்பு கருதி இனி பொது இடங்களில் யாரும் முகத்தை மூடக் கூடாது என்ற ஆணையை எனக்கு கொடுத்திருக்கும் அதிகாரத்துக்கு உட்பட்டு பிறப்பிக்கிறேன். ஒருவரை அடையாளம் காண்பதற்கு கடினமாக இருப்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது' என்றுள்ளார். இன்று முதல் இந்த உத்தரவு இலங்கையில் அமலுக்கு வருகிறது. 

இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் இதுவரை 253 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து பல இடங்களில் அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். இதில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையின் மொத்த ஜனத்தொகை 2.1 கோடியாகும். இதில் 10 சதவிகிதத்தினர் இஸ்லாமியர்கள் ஆவர். அவர்களில் பெரும்பாலானோர் அடிப்படைவாத இஸ்லாம் கொள்கைகளை பின்பற்றுவதில்லை. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................