இலங்கை குண்டு வெடிப்பில் 45 குழந்தைகள் இறந்துள்ளனர்: யூனிசெஃப் தகவல்

இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பில் 45 குழந்தைகள் இறந்துள்ளதாக யூனிசெஃப் தகவல் அளித்துள்ளது.

இலங்கை குண்டு வெடிப்பில் 45 குழந்தைகள் இறந்துள்ளனர்: யூனிசெஃப் தகவல்

முதல் 8 இடங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டுகள் வெடித்துள்ளன

Geneva:

இலங்கையில் ஈஸ்டர் தினத்தையொட்டி  சர்ச்களிலும் நட்சத்திர ஹோட்டல்களிலும் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இலங்கையில் நேற்றுமுன்தினம் முதல் 8 இடங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டுகள் வெடித்துள்ளன. காலை 8.45-க்கு மேற்கு கடற்கரை பகுதி நகரமான நிகோம்போவில் புனித செபாஸ்டியன், புனித அந்தோணி சர்ச்சுகளிலும், மட்டக்களப்பில் உள்ள இன்னொரு சர்ச்சிலும் வெடிகுண்டுகள் வெடித்தன. 

இதேபோன்று தி ஷாங்ரி லா, தி சின்னமான் கிராண்ட், தி கிங்ஸ்பரி  ஆகிய 3 ஃபைவ் ஸ்டார் ஓட்டல்களிலும் குண்டுவெடிப்பு நடந்தது.

இந்த கோர சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 300-யை தாண்டியுள்ளது. இவர்களில் 45-க்கு அதிகமானவர்கள் குழந்தைகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. 500-க்கும் அதிகமானோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பில் 45 குழந்தைகள் இறந்துள்ளதாக யூனிசெஃப் தகவல் அளித்துள்ளது. யூனிசெஃப் தகவல் தொடர்பாளாரான கிறிஸ்டோப் பவுலியரக் ஜெனீவாவில் நிரூபர்களிடம் இந்த தகவலை தெரிவித்துள்ளார். பல குழந்தைகள் உயிருக்கு போராடி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.