அமைதியற்ற இலங்கை அரசியல்: ரத்தாகுமா ராஜபக்சே போட்ட சீன ஒப்பந்தம்

வெளிநாடுகள் இன்னும் ராஜபக்சே அரசை ஏற்கவில்லை. அதேசமயம் ரணிலின் கட்சி ராஜபக்சேவால் போடப்பட்ட ஒப்பந்தங்களும், திட்டங்களும் சட்ட விரோதமானவை என்று கூறிவருகிறது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
அமைதியற்ற இலங்கை அரசியல்: ரத்தாகுமா ராஜபக்சே போட்ட சீன ஒப்பந்தம்

இலங்கை துறைமுக அதிகாரி ஒருவர் 50 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஒப்பந்தங்கள் ராஜபக்சே அரசால் போடப்பட்டத்தாக தெரிவித்துள்ளார்.

Colombo: 

இலங்கை சீன நிறுவனங்களுடன் பல மில்லியன் மதிப்புள்ள இரண்டு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டுள்ளது. அரசியல் சூழல் மோசமாக உள்ள நிலையில், இந்த ஒப்பந்தங்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. 

துறைமுக மேம்பாட்டுக்காக சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் தற்போது வாக்கெடுப்பில் ரணில் வென்றுள்ளதால், சிறிசேனா நியமித்த ராஜபக்சேவால் போடப்பட்ட ஒப்பந்தம் எப்படி செல்லுபடி ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. மீண்டும் வந்துள்ள அரசு இதனை ஏற்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.. 

வெளிநாடுகள் இன்னும் ராஜபக்சே அரசை ஏற்கவில்லை. அதேசமயம் ரணிலின் கட்சி ராஜபக்சேவால் போடப்பட்ட ஒப்பந்தங்களும், திட்டங்களும் சட்ட விரோதமானவை என்று கூறிவருகிறது.

இலங்கை துறைமுக அதிகாரி ஒருவர் 50 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஒப்பந்தங்கள் ராஜபக்சே அரசால் போடப்பட்டத்தாக தெரிவித்துள்ளார். 32 மில்லியன் டாலர் செலவில் ஆழத்தை அதிகரிப்பதற்காக சீன துறைமுக இன்ஜினியரிங் நிறுவனத்திடமும், இதே திட்டத்துக்காக 25.7 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் 3 க்ரேன்களை வாங்க ஷாங்காய் ஹென்ஹூவா ஹெவி நிறுவனத்திடமும் ஒப்பந்தம்  போடப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார். 

773kvpdg

இந்த ஒப்பந்தங்கள் நீடிக்குமா என்று ரணிலின் செய்தி தொடர்பாளர் ரஜிதா செனர்தனேவிடம் கேட்டதற்கு '' நாங்கள் கட்டாயம் மறு பரிசீலனை செய்வோம்'' என்று கூறியுள்ளார்.

இந்தியாதான் இலங்கையில் துறைமுக வர்த்தகத்தில் 80 சதவிகித பங்களிப்பை அளிக்கிறது. சீனாவின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகிறது. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................