This Article is From Dec 30, 2018

‘நேர்மறை விஷயங்களைப் பரப்பவோம்!’- ‘மன் கி பாத்’ உரையில் பிரதமர் மோடி

நாம் நேர்மறையான விஷயங்களைப் பரப்புவோம் என்று ‘மன் கி பாத்’ உரையில் பேசியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

‘நேர்மறை விஷயங்களைப் பரப்பவோம்!’- ‘மன் கி பாத்’ உரையில் பிரதமர் மோடி

இந்த ஆண்டு தான் இந்த உலகின் மிகப் பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான ‘ஆயுஷ்மான் பாரத்’ தொடங்கப்பட்டது, மோடி

New Delhi:

எதிர்மறையான விஷயங்கள் மிக வேகமாக பரவும். நேர்மறையான விஷயங்கள்தான் பரவ நேரமாகும். நாம் நேர்மறையான விஷயங்களைப் பரப்புவோம் என்று ‘மன் கி பாத்' உரையில் பேசியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

மோடி, மாதம் ஒரு முறை அனைத்திந்திய வானொலி வாயிலாக நாட்டு மக்களிடையே ‘மன் கி பாத்' என்ற தலைப்பில் உரையாற்றி வருகிறார். அவர் இன்று ஆற்றிய உரையில், ‘இந்திய நாட்டு மக்களின் கூட்டு முயற்சியால், நாம் இந்த ஆண்டு பெற்றது ஏராளம். இந்த முன்னேற்றம் 2019 ஆம் ஆண்டும் தொடரும் என்று நம்புகிறேன். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நேர்மறை விஷயங்களை பரப்ப முயல்வோம். நமது நாட்டின் நாயகர்களைப் பற்றி எடுத்துரைப்போம்.

பல இணையதளங்கள் நேர்மறையான பல செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. அதைப் போன்ற செய்திகளை மக்கள் அதிகமாக ஷேர் செய்து வைரலாக்க வேண்டும். அதன் மூலம் நேர்மறையான எண்ணம் பன்மடங்கு பெருகும்.

இந்த ஆண்டு தான் இந்த உலகின் மிகப் பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான ‘ஆயுஷ்மான் பாரத்' தொடங்கப்பட்டது. அதேபோல இந்த ஆண்டுதான், இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு கிராமத்திற்கு மின்சார வசதி சென்று சேர்ந்தது. மேலும், வறுமையும் பன்மடங்கு ஒழிக்கப்பட்டுள்ளது. சுகாதாரம் தொடர்பாக அரசு முன்னெடுத்த ‘ஸ்வச்சத்தா' திட்டமும் 95 சதவிகித மக்கள் தொகையை அடைந்துள்ளது.

கடந்த 75 ஆண்டு கால சுதந்திர இந்திய வரலாற்றில், டெல்லியில் இருக்கும் செங்கோட்டையில் சுதந்திரத் தினத்தைத் தவிர இன்னொரு நாள் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது இந்தாண்டு தான்.

இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலின் நினைவாக உலகின் உயரமான ‘ஒற்றுமையின் சிலை' அற்பணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் நாட்டின் ஒற்றுமைக்காக பாடுபடும் சாமானியர்களுக்கு சர்தார் படேல் விருதும் கொடுக்கப்படும்.

ஐ.நா சபை, சுற்றச்சூழல் விருதான ‘உலகின் சாம்பியன்ஸ்' விருதை இந்தியாவுக்குத்தான் கொடுத்துள்ளது. மாற்று எரிசக்தித் துறையிலும், பருவ நிலை மாற்றத்துக்காகவும் இந்தியா எடுக்கும் முயற்சிகளை உலக நாடுகள் பார்த்து வியந்து வருகின்றன' என்று பேசினார்.


 

.