ஆன்மிகத் தலைவர் பைய்யூ மஹாராஜ் தற்கொலை

50 வயதான அவர் தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தில் அவர் மன சோர்வுடன் இருந்ததாக குறிப்பிட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்

 Share
EMAIL
PRINT
COMMENTS
New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. அண்ணா ஹசாரேவின் போராட்டம் முடிவுக்கு வர சமாதானம் பேசியவர்
  2. முக்கிய அரசியல்வாதிகள் உள்ளிட்டு பலர் அவரை பின்பற்றினர்
  3. துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார்
புதுடில்லி: புகழ்பெற்ற ஆன்மீக தலைவர் பைய்யூ மஹாராஜ், செவ்வாய்கிழமை அன்று தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். பைய்யூ மஹாராஜ் என்கிற உதய் சிங் தேஷ்முக், மன அழுத்தம் காரணமாக இந்தூரில் உள்ள அவரது ஆசிரமத்தில் தற்கொலை செய்து கொண்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

50 வயதான அவர் தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தில் அவர் மன சோர்வுடன் இருந்ததாக குறிப்பிட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தோரில் உள்ள பாம்பே மருத்துவமனையில் பைய்யூ மஹாராஜின் இறப்பு உறுதி செய்யப்பட்டது.

“மருத்துவமனைக்கு தீவிரமான நிலையில் பைய்யூ மஹாராஜ் கொண்டுவரப்பட்டார். விசாரணையில், அவர் சுட்டுக்கொண்ட விவரங்கள் தெரியவந்தன” என காவல் துறை அதிகாரி ஜெயந்த் ரத்தோர் கூறினார்.

மத்திய பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான், மஹாராஜின் இறப்பிற்கு தனது இரங்கலை பதிவிட்டார். இந்த ஆண்டு தொடக்கத்தில், பைய்யூ மஹாராஜ் உள்ளிட்டு ஐந்து ஆன்மீக குருக்களை அமைச்சர் பதவியில் நியமித்தார். ஆனால், அதை மஹாராஜ் மறுத்தார்.

 
bhaiyyu maharaj

முன்னனி அரசியல் கட்சி தலைவர்கள், தொழில் அதிபர்களை தன் பைய்யூவை பின்பற்றியவர்கள் ஏராளம். புகழ்பெற்ற பாடகர் லதா மங்கேஷ்கர், மஹாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் ஆகியோர் பைய்யூ மஹாராஜை பின்பற்றுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது..

மஹாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் புகழ்பெற்றவராக இருந்தார். பைய்யூ மஹாராஜின் இறப்பு செய்தியை கேட்டு, அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

2011-ம் ஆண்டு அண்ணா ஹசாரே நடத்திய ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய காங்கிரஸ் அரசு சமாதானம் பேச அனுப்பப்பட்டவர் பைய்யூ மஹாராஜ் என்பது குறுப்பிடத்தக்கது

 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................