ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் டயர் வெடித்தது.. நூலிழையில் உயிர்தப்பிய பயணிகள்! வீடியோ!!

இன்று காலை 9 மணி அளவில், துபாய் - ஜெய்ப்பூர் செல்லும் எஸ்ஜி 58, ரக விமானம் அவசரமாக தரையிரக்கப்பட்டது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் டயர் வெடித்தது.. நூலிழையில் உயிர்தப்பிய பயணிகள்! வீடியோ!!

டயர் வெடித்ததை தொடர்ந்து, விமானம் அவசரமாக தரையிரக்கப்பட்டது.

Jaipur: 

189 பயணிகளுடன் சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் ஒரு டயர் வெடித்ததை தொடர்ந்து, ஜெய்ப்பூரில் அவசர அவசரமாக விமானம் தரையிரக்கப்பட்டு, பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இன்று காலை 9 மணி அளவில், துபாய் - ஜெய்ப்பூர் செல்லும் எஸ்ஜி 58, ரக விமானம் அவசரமாக தரையிரக்கப்பட்டதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில், மிகுந்த சிரமமடைந்து அந்த விமானம் தரையிரங்குகிறது.

இதேபோல், கடந்த ஆண்டு பிப்.9ஆம் தேதி 200 பயணிகளுடன் புறப்பட்ட விமானத்தின் ஒரு டயர் வெடித்தது. இதைத்தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிரங்கியது.

எனினும், தரையிரங்கும் போதே, விமானத்தின் மற்றொரு டயரும் வெடித்தது. எனினும், 199 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................