இந்தியாவில் முதன்முறையாக மாற்று எரிசக்தி மூலம் இயங்கிய பயணிகள் விமானம்..!

இந்தியாவில் முதன்முறையாக மாற்று எரிசக்தியான பயோ-ஃப்யூல் மூலம் இயக்கப்பட்ட விமானம் இன்று சோதனை செய்யப்பட்டது

New Delhi:

இந்தியாவில் முதன்முறையாக மாற்று எரிசக்தியான பயோ-ஃப்யூல் மூலம் இயக்கப்பட்ட விமானம் இன்று சோதனை செய்யப்பட்டது. மொத்த எரிபொருளில் 25 சதவிகிதம் மாற்று எரிபொருள் கொண்ட ஸ்பைஸ்ஜெட் நிறுவன விமானம் இன்று டேராடூனில் புறப்பட்டு டெல்லியில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த விமானத்தில் 72 பேர் பயணம் செய்ய முடியும். 

விவசாயப் பயிர்கள் மூலம் பெறப்பட்ட ரெசிடியூ, உண்ண தகுதியற்ற எண்ணெய்கள், மற்றும் குப்பையிலிருந்து எடுக்கப்பட்ட எரிபொருள் உள்ளிட்டவையைக் கொண்டு தான் இந்த பயோ- ஃப்யூல் தயாரிக்கப்பட்டுள்ளது என்று ஸ்பைஸ்ஜெட் விமானம் கூறியுள்ளது.

இந்த மாற்று எரிசக்தியின் மூலம், விமானப் பயணத்துக்கு ஆகும் செலவு குறையும் என்றும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 
 

6rf55lug

டேராடூனில் இருக்கும் இந்தியன் இன்ஸ்டிடிட்யூட் ஆஃப் பெட்ரோலியத்தில், இந்த மாற்று எரிசக்தி உருவாக்கப்பட்டுள்ளது. சோதனை ஓட்டத்துக்கு முன்னர் இந்த எரிசக்தி பலகட்ட சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இன்று நடந்த சோதனை ஓட்டத்தின் போது, உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், விமானத்தைக் கொடி அசைத்து டேராடூனிலிருந்து துவக்கி வைத்தார். விமானத்தில் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 20 பேர் பயணம் செய்தனர். 25 நிமிடத்தில் விமானம் டெல்லிக்கு வந்தடைந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, மத்திய அமைச்சர்களான நிதின் கட்கரி, சுரேஷ் பிரபு, தர்மேந்திர பிரதான், ஹர்ஷ் வர்தன் ஆகியோர் டெல்லி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் போது இருந்துள்ளனர்.

இந்த மாற்று எரிபொருள் ஜத்தோர்பா செடியின் எண்ணெயிலிருந்தும், ஏவியேஷன் டர்பைன் எரிபொருளிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்று எரிபொருளை உருவாக்க சத்தீஸ்கரில் இருக்கும் 500 குடும்பங்கள் உழைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.