அதிரடி ஆஃபரை அறிவித்த ஸ்பைஸ் ஜெட்! ரூ. 2,501 விலையில் விமான பயணம்!!

ஸ்பைஸ் ஜெட்டின் அதிகாரப்பூர்வ இணைய தளமான www.spicejet.com, ஸ்பைஸ் ஜெட்டின் மொபைல் ஆப் உள்ளிட்டவற்றில் புக்கிங் ஓப்பன் செய்யப்பட்டுள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
அதிரடி ஆஃபரை அறிவித்த ஸ்பைஸ் ஜெட்! ரூ. 2,501 விலையில் விமான பயணம்!!

கடந்த மாதம் உள்நாட்டில் 46 Non Stop விமான சேவையை ஸ்பைஸ் ஜெட் அறிவித்திருந்தது.

பண்டிகை காலங்களில் விமான பயணத்தை விரும்புவோருக்கு அதிரடி ஆஃபரை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வழங்கியுள்ளது. ரூ. 2501 – க்கு விமான பயணத்திற்கான டிக்கெட்டுகளை வழங்குகிறது பைஸ் ஜெட்.

சென்னையிலிருந்து திருவனந்தபுரம் செல்பவர்கள் ரூ. 2,501 கட்டணம் செலுத்தி ஸ்பைஸ் ஜெட் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். நவம்பர்20-ம்தேதி முதல் இந்த குறைக்கப்பட்ட கட்டண சேவை நடைமுறைக்கு வரும்.  

ஸ்பைஸ் ஜெட்டின் அதிகாரப்பூர்வ இணைய தளமான www.spicejet.com, ஸ்பைஸ் ஜெட்டின் மொபைல் ஆப் உள்ளிட்டவற்றில் புக்கிங் ஓப்பன் செய்யப்பட்டுள்ளது.

விமானங்களின் நேர அட்டவணை

Flight numberOriginDestinationDepartureArrivalFrequency
SG 3073ChennaiThiruvananthapuram9:50 AM11:45 AMDaily
SG 3074ThiruvananthapuramChennai5:55 PM7:45 PMDaily
SG 91ThiruvananthapuramMale12:30 PM1:55 PMDaily
SG 92MaleThiruvananthapuram2:45 PM4:45 PMDaily

(Source: SpiceJet)

இதேபோன்று திருவனந்தபுரத்திலிருந்து மாலத்தீவுகளுக்கு செல்ல கட்டணத்தை ரூ. 5,539-ஆக ஸ்பைஸ் ஜெட் குறைத்துள்ளது.

இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுற்றுலாப் பயணிகளுக்கு வசதிகளை அளிக்கும் வகையில் திருவனந்தபுரத்திலிருந்து மாலத்தீவுகளுக்கு நேரடி விமானங்களை இயக்குகிறோம். சென்னை – திருவனந்தபுரம் – சென்னை வான் வழியில் கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்திருந்தனர். இதை ஏற்று கூடுதல் விமானங்கள் இந்த ரூட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் உள்நாட்டில் இயங்கும் 46 இடைநில்லா விமான சேவையை ஸ்பைஸ்ஜெட் அறிமுகம் செய்திருந்தது. இவற்றின் சேவை அக்டோபர் 27-ம்தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................