This Article is From Sep 20, 2018

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான புகாரை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் (MLA) மீதான பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனை விரைந்து விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான புகாரை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்

தனி நீதிமன்றம் அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

சென்னை (Chennai) : எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்காக சென்னையில் சிறப்பு நீதிமன்றம் இன்று தொடங்கப்பட்டது. இதனை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஹுலுவாடி ஜி.ரமேஷ் திறந்து வைத்தார்.

நாட்டில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் (MLA) மீதான பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனை விரைந்து விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் சிறப்பு நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்த தலைமை நீதிபதி ஹுலுவாடி ஜி. ரமேஷ், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான அனைத்து வழக்குகளும் இந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்றார்.

இதேபோன்று சிறப்பு நீதிமன்றங்கள் கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியிலும், மார்ச்சில் ஆந்திராவிலும் தொடங்கப்பட்டது. பீகார், கர்நாடகா, கேரளா, மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா, உத்தரப்பிரதேசம் மற்றும மேற்கு வங்காளத்தில் மொத்தம் 9 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படவுள்ளன.

.