This Article is From Nov 07, 2018

அயோத்தி தீபாவளி கொண்டாட்டத்தில் தென்கொரிய அதிபரின் மனைவி!

இந்தியாவிற்கு தன்னை அழைத்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு, தென்கொரிய அதிபரின் மனைவி கிம் ஜங்-சூக் நன்றி தெரிவித்தார்.

அயோத்தி தீபாவளி கொண்டாட்டத்தில் தென்கொரிய அதிபரின் மனைவி!

உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன், தென்கொரிய அதிபரின் மனைவி கிம் ஜங்-சூக்.

Ayodhya:

அயோத்தியில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் தென்கொரிய அதிபரின் மனைவி கிம் ஜங்-சூக் புடவை அணிந்து அழகாக தோற்றமளித்தார். உத்தரபிரதேச முதலவர் யோகி ஆதித்யநாத்துடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கிம் ஜங்-சூக் பங்கேற்றார்.

கிம் ஜங்-சூக் நேற்று மதியம் 2 மணிக்கு ராம்காத் பூங்காவில் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்ததும், மக்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட்டனர். ராணி ஹூ-வின் நினைவிடத்தை பார்வையிட்ட கிம் ஜங்-சூக் தனது அயோத்தி சுற்றுப் பயணத்தை தொடங்கினார்.

கி.பி 48ல் தென் கொரியாவிற்கு சென்ற அயோத்தி இளவரசியான சூரிரத்னா அங்குள்ள ஒரு சமஸ்தானத்தின் மன்னரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் ஹர் ஹூவாங்-ஓக் என அயோத்தி இளவரசி அழைக்கப்பட்டதாக வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹூ-வின் நினைவிடத்திலிருந்து ராம்காத் பூங்காவில் நடைபெற்ற ராம் தர்பார் என்ற நிகழ்ச்சிக்கு வந்தடைந்தார். அந்த நிகழ்ச்சியில் அம்மாநில ஆளுநர் ராம் நாயக் மற்றும் யோகி ஆதித்யநாத் ராமன், லட்சுமணனாக கிம் சீதையாக பாவிக்கப்பட்டார்.

iku3asdo

கிம் பேசுகையில், இந்தியா மற்றும் கொரியாவிற்கு இடையிலிருக்கும் உறவு குறித்து பெருமிதம் கொணடார். வருங்காலத்திலும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு இதே போல் அமைதியுடன் நீடிக்க வேண்டுமென்று கூறினார்.

இமேஜ்: ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை கிம் ஜங்-சூக் பார்வையிட்டார்.

இருளால், வெளிச்சத்தை தோற்கடிக்க முடியாது. எல்லா விளக்குகளையும் அனைவரும் ஒன்று திரண்டு ஏற்றும்போது எப்படிப்பட்ட இருளையும் நம்மால் தோற்கடிக்க முடியுமென்று அவர் கூறினார். இன்று கிம் ஜங்-சூக் ஆக்ராவிலுள்ள தாஜ்மஹாலை பார்வையிட்டார்.

.