This Article is From Jul 09, 2019

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை : காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசு முடிவு ?!!

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக முதல்வர் குமாரசாமி ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை : காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசு முடிவு ?!!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் தண்ணீர் திறக்கும் முடிவில் உள்ளது கர்நாடகம்.

காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க கர்நாடக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான ஒப்புதலை கர்நாடக முதல்வர் குமாரசாமி அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் தண்ணீர் திறக்கும் முடிவை கர்நாடக அரசு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் அன்றாட பயன்பாட்டிற்கே தண்ணீர் பற்றாக்குறை பிரச்னை இருந்து வருகிறது. 

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிலத்தடி நீர் மட்டம் குறைந்திருப்பதால் மக்கள் மழை எதிர்பார்த்துள்ளனர். இதற்கிடையே காவிரியில் இருந்து கர்நாடகம் தண்ணீரை திறந்து விட்டால் பற்றாக்குறை பிரச்னை ஓரளவுக்கு கட்டுக்குள் வர வாய்ப்புள்ளது. 

இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காணப்படுவதால் தண்ணீரை திற்கும் முடிவுக்கு கர்நாடகம் வந்துள்ளது. இதற்கு முதல்வர் குமாரசாமியும் ஒப்புதல் அளித்துள்ளார். 

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடகம் தமிழகத்திற்கு ஜூனில் மட்டும் 9.19 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும். இதை உடனடியாக வழங்கக் கோரி கடந்த மாதம் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. அதையடுத்து, தமிழகத்திற்கு தண்ணீரை வழங்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. 

.