சர்ச்சை எதிரொலி: மகனுடன் நீச்சல்குளத்தில் இருந்த புகைப்படத்தை நீக்கிய சவுந்தர்யா ரஜினிகாந்த்

சவுந்தர்யாவின் இந்த போட்டோ பதிவுக்கு எதிர்ப்புகள் எழுந்தன ; கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து அந்த போட்டோவை ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டதாக சவுந்தர்யா ரஜினிகாந்த் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
சர்ச்சை எதிரொலி: மகனுடன் நீச்சல்குளத்தில் இருந்த புகைப்படத்தை நீக்கிய சவுந்தர்யா ரஜினிகாந்த்


மகனுடன் நீச்சல்குளத்தில் கொண்டாட்டமாக இருக்கும் போட்டோ மீது கடும் விமர்சனங்கள் வந்ததால் நடிகர் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா அதை ட்விட்டரில் இருந்து நீக்கியுள்ளார்.

மகன் வேத் உடனான படங்களை சவுந்தர்யா ரஜினிகாந்த், அவ்வப்போது சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.  இந்நிலையில் மகன் வேத், நீச்சல் குளத்தில் நீச்சலடிக்கும் படங்களை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் சவுந்தர்யா. தண்ணீர் பிரச்சனையில் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ரஜினியின் மகள், இப்படி ஒரு படத்தை ட்விட்டரில் பதிவிட்டிருந்தது பெரும் சர்ச்சையானது.

இதையடுத்து, சவுந்தர்யாவின் இந்த போட்டோ பதிவுக்கு எதிர்ப்புகள் எழுந்தன ; கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து அந்த போட்டோவை ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டதாக சவுந்தர்யா ரஜினிகாந்த் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ரஜினி ரசிகர்கள் பலர் இது பழைய புகைப்படம் என்று குறிப்பிட்டுத்தானே போட்டோவை பதிவிட்டீர்கள். விமர்சனத்துக்கு பயந்து நீக்கலாமா,,,? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................