விரைவில் பாஜகவுடன் இணைகிறார் ஓ.பி.எஸ்! - டிடிவி தினகரன்

விரைவில் பாஜகவுடன் இணைந்து விடுவார் ஓ.பன்னீர்செல்வம் என்று அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
விரைவில் பாஜகவுடன் இணைகிறார் ஓ.பி.எஸ்! - டிடிவி தினகரன்

இதுகுறித்து மதுரையில் இன்று, செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, இரட்டை இலையை நாங்கள் கேட்கவில்லை. ஏமாற்றி உள்ளார்கள் என்பதே எங்கள் வாதம்.

இடைத்தேர்தல் வந்தால் தேர்தல் ஆணையம் சின்னம் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதிமுகவின் ஒரு பிரிவுதான் அமமுக, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரும் வரை கட்சியின் பெயரை எப்படி பதிவு செய்ய முடியும். அதிமுக மீதான உரிமைக்காக போராடும் வாய்ப்பை இழக்க நேரிடும் என்பதால் கட்சியை பதிவு செய்யவில்லை.

குக்கர் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற நிலையில் அந்த சின்னத்தை கேட்பதில் தவறில்லை. குக்கர் சின்னம் தமிழகம் முழுவதிலும் சென்று சேர்ந்துள்ளது. நிறைய கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது.

நாங்கள் கூட்டணி செல்ல விரும்பவில்லை. ஒரு பஸ்சில் ஏறி மறுபஸ்சில் வருபவர்களுக்கு இங்கு இடம் இல்லை. எங்கள் கட்சியில் இருந்து வேறு கட்சிகளுக்கு போனவர்களைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை. மக்களும், தொண்டர்களும் எங்களுடன் உள்ளனர்.

அதிமுகவின் பொதுச்செயலாளாராக மோடியை மாற்றி விட்டனர். ஓபிஎஸ் விரைவில் பாஜகவுக்கு சென்று விடுவார். நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியில் போட்டியிடுவோம். அதில் 37 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று அவர் கூறியுள்ளார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................