வருமான வரி மறு ஆய்வுக்குத் தடை விதிக்கக் கோரிய சோனியா மற்றும் ராகுல் மனு தள்ளுபடி

காங்கிரஸின் மூத்த தலைவர் ஆஸ்கர் ஃபெர்னான்டஸின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS

சோனியா மற்றும் ராகுல் காந்தியும் தங்கள் வருமான வரி விவரத்தை ஆய்வு செய்வதை எதிர்த்து மனு செய்திருந்தனர்


New Delhi: 

சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் 2011-2012-ம் ஆண்டுக்கான வருமான வரி விவரங்களை, மீண்டும் எடுத்து மறு ஆய்வு செய்வதற்கு வருமான வரித்துறைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

“வருமான வரித்துறைக்கு மறு ஆய்வு செய்ய அனுமதி இருக்கிறது. எனவே இந்த மனு ஏற்கப்படாது” என்று டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், வருமான வரித்துறையின் குறை தீர்வு மையத்திடம் முறையிடலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

மார்ச் மாதம், சோனியா மற்றும் ராகுலுக்கு, வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதில், அவர்களின் வருமான வரி கணக்குகள் மீண்டும் ஆராயப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இதை எதிர்த்து தான் இருவரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதேபோல காங்கிரஸின் மூத்த தலைவர் ஆஸ்கர் ஃபெர்னான்டஸின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த ஆண்டில் யங்க் இந்தியன் என்ற நிறுவனத்தின் வருமான வரி விவரங்களை மறு ஆய்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர் நீதிமன்றம். யங் இந்தியன் நிறுவனத்தில், சோனியா மற்றும் ராகுல் பங்குதாரர்களாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................