This Article is From Jun 01, 2019

‘சோனியாவா, ராகுலா..?’- யார் நாடாளும்ன்ற காங்கிரஸ் தலைவர்; இன்று முக்கிய முடிவு!

தேர்தல் தோல்வியை அடுத்து கடந்த வாரம் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி சந்திப்பில் ராகுல், கட்சியின் மூத்த தலைவர்களுக்கு எதிராக கறாரான விமர்சனம் வைத்தாராம்

‘சோனியாவா, ராகுலா..?’- யார் நாடாளும்ன்ற காங்கிரஸ் தலைவர்; இன்று முக்கிய முடிவு!

543 மக்கவளை இடங்களில் காங்கிரஸுக்கு இருப்பதோ 52 இடங்கள்தான். எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற காங்கிரஸுக்கு இன்னும் 3 இடங்கள் தேவை. 

ஹைலைட்ஸ்

  • காங். நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சந்திக்க உள்ளனர்
  • ராகுல், தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்
  • லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் 52 தொகுதிகளில்தான் வெற்றி பெற்றது
New Delhi:

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, வெற்றி பெற்ற காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்கள் இன்று சந்திக்கின்றனர். அப்போது தங்கள் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் யார் என்பது குறித்து அவர்கள் முடிவெடுக்க உள்ளனர். சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர், “நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு முழு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று ராகுல் சொன்னது குறிப்பிடத்தக்கது. 

ராகுலின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயும், வெளியில் இருந்தும் எதிர்ப்புக் குரல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால், தனது முடிவில் ராகுல் ஸ்திரமாக இருப்பதாகத் தெரிகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான் குறைந்தபட்சம் ராகுல், நாடாளுமன்றத்திலாவது காங்கிரஸை வழிநடத்த வேண்டும் என்று அக்கட்சியினர் கருதுகின்றனர். 

543 மக்கவளை இடங்களில் காங்கிரஸுக்கு இருப்பதோ 52 இடங்கள்தான். எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற காங்கிரஸுக்கு இன்னும் 3 இடங்கள் தேவை. 

ஒருவேளை ராகுல் காந்தி, நாடாளுமன்றத் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், சோனியா காந்தியை மீண்டும் நாடாளுமன்றத் தலைவராக தொடர வேண்டும் என்ற திட்டமும் காங்கிரஸினர் இடையே உள்ளதாக தெரிகிறது. 

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து ராகுல் காந்தி, பெரிதாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. பிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் மட்டும் தனது தாய் சோனியா காந்தியுடன் கலந்து கொண்டார் ராகுல். 

தேர்தல் தோல்வியை அடுத்து கடந்த வாரம் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி சந்திப்பில் ராகுல், கட்சியின் மூத்த தலைவர்களுக்கு எதிராக கறாரான விமர்சனம் வைத்தாராம். “கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதைக் காட்டிலும், உங்கள் பிள்ளைகள் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தீர்கள். தேர்தலில் வீழ்த்தப்பட்டோம்” என்று ராகுல் பேசியதாகக் கூறப்படுகிறது. 

காங்கிரஸ் இதைப் போன்ற ஒரு பிரச்னையில் 1999 ஆம் ஆண்டும் சிக்கியது. அப்போது காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்ற ஒரு சில மாதங்களில் அவருக்குக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியது. அவரது வெளிநாட்டு வம்சாவளியை முன்வைத்து விமர்சனம் வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக சோனியா அறிவித்தார். ஆனால், நாட்டின் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து தனது ராஜினாமா முடிவை திரும்பப் பெற்றுக் கொண்டார் சோனியா. 

.