பொய் செய்திகள் பரப்பிய சமூக வலைதள குழு நிர்வாகிகள் கைது!

பொய் செய்திகளை பரப்பும் குழுக்களின் சமூக வலைத்தள பக்கங்களை முடக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது

பொய் செய்திகள் பரப்பிய சமூக வலைதள குழு நிர்வாகிகள் கைது!

The police are searching for other such administrators. (Representational)

ஹைலைட்ஸ்

  • பொய் செய்திகள் பரப்பியதால் சமூக வலைத்தளக் குழு கைது
  • உயிருக்கு சேதம் ஏற்படும் விதமாக செயல்பட்டனர்
  • மற்ற குழுக்களைத் தேடும் பணியில் காவல்துறை
Srinagar: காஷ்மீரில் பொய் செய்திகள் பரப்பியதற்காக, சமூக வலைத்தளக் குழுவின் நிர்வாகிகள் கைது.

ஶ்ரீநகர்: சட்ட விரோதமாக, காஷ்மீர் இளைஞர்களின் பெயர்களை சீர் குலைக்கும் பொய் செய்திகளைப் பரப்பியதற்காக, சமூக வலைத்தளக் குழுவின் இரண்டு நிர்வாகிகள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

“காஷ்மீர் சோன், ஹம்சா ஹிஸ்பி, க்விக் நியூஸ் ஆகிய குழுக்கள் பற்றி அவந்திபோரா காவல் துறையினருக்கு தகவல் வந்தது. இந்த குழுக்கள் காஷ்மீர் இளைஞர்களின் புகைப்படங்களை வெளியிட்டு, இவர்கள் காஷ்மீர் பாதுகாப்பு படைக்கு பாதுகாப்பு தகவல்கள் அளிக்கின்றன எனக் கூறி செய்தி பரப்பி வந்தது” என காவல்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

சமூக வலைத்தள குழுக்களின் நிர்வாகிகள், இளைஞர்களின் பெயருக்கு களங்கம் விளைவிக்கு வகையிலும், உயிருக்கு சேதம் ஏற்படுத்தும் விதமாகவும் இச்செயல்கள் செய்யப்பட்டுள்ளது என்றார்.

“இரண்டு குழுக்களின் நிர்வாகிகள் பாம்போர் குடியிருப்பை சேர்ந்த சஜத் அகமத் மிர் மற்றும் சாஹித் அகமத் பாட் என்பது தெரிவயவந்தவுடன், காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்” என செய்தித்தொடர்பாளர் கூறினார்.

மற்ற குழுக்களின் நிர்வாகிகளையும் தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். “பொய் செய்திகளை பரப்பும் குழுக்களின் சமூக வலைத்தள பக்கங்களை முடக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.