பாராசூட் செயலிழப்பு: ஸ்கைடைவ் செய்த 2 பேர் கீழே விழுந்து படுகாயம்!

இந்த ஸ்கைடைவ் விபத்திற்கு பின்னர் இனி விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் இருப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

பாராசூட் செயலிழப்பு: ஸ்கைடைவ் செய்த 2 பேர் கீழே விழுந்து படுகாயம்!

பாராசூட் செயலிழப்பு: ஸ்கைடைவ் செய்த 2 பேர் கீழே விழுந்து படுகாயம்: அதிர்ச்சி வீடியோ!

பாராசூட் செயலிழந்ததன் காரணமாக ஸ்கைடைவ் செய்த 2 பேர் மேலிருந்து கீழே விழும் தருணம் வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளது. புளோரிடாவின் டைட்டஸ்வில்லில் நடந்த சம்பவத்தின் காட்சிகள், ஒரு வீட்டின் முன் பகுதியில் விபத்துக்குள்ளாகும் முன்பு ஸ்கைடைவ் செய்தவர்கள் தரையை நோக்கி கீழே விழுகிறார்கள். 

இதுதொடர்பாக டைட்டஸவில் தீயணைப்புத் துறையினர் அளித்த தகவலின் படி, கீழே விழுந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தீயணைப்புதுறையின் தலைவர் கெர்க சுட்டன் சிஎன்என் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், இந்த ஸ்கைடைவ் விபத்திற்கு பின்னர் இனி விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் இருப்போம் என்று தெரிவித்துள்ளனர். டைட்டஸவில் நகரத்தின் செய்திகளின் படி, பாராசூட் செயலிழப்பு காரணமாக கீழே விழுந்தவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளன. 

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த கிறிஸ்டினா ரென்ஃபோர் கூறும்போது, அவர்கள் கீழே விழுவதை நாங்கள் பார்த்தோம் எனினும், எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. முதலில் அவர்கள் கீழே வரும் போது வேடிக்கையாக அதனை பார்த்தோம். பின்னர் தான் அவர்கள் சிக்கலில் இருந்தது எங்களுக்கு புரிந்தது. 

இந்த விபத்து குறித்த வீடியோ காட்சிகளையும் அவர் தனது முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார். அதில், அவர்கள் ஒரு வீட்டின் முற்றத்தில் இருந்த மரத்தில் சிக்கி விழுந்தனர். தொடர்ந்து, நில நிரத்தில் உள்ள அந்த பாராசூட்டுகள் மரக்கிளையில் சக்கிக் காணப்படுகிறது. தொடர்ந்து, அடுத்தடுத்து புகைப்படங்கள் அவர்கள் மருத்துவமைனக்கு அழைத்தச்செல்லப்பட்டதை காட்டுகிறது. 

தொடர்ந்து, காயமடைந்தவர்களின் விவரம் குறித்து தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. டேன்டம் விமான நிலையத்தில் இருந்து வந்த விமானத்தில் இருந்து குதித்தது முதற்கட்ட விசாரணையில் தெரிகிறது. தொடர்ந்து, சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 
 

Click for more trending news