‘திரும்ப திரும்ப பண்ற நீ!’- மீண்டும் செல்போனை தட்டிவிட்டாரா சிவக்குமார்?

சிவக்குமார், மீண்டும் அது போன்ற ஒரு செயலில் ஈடுபட்டுள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
‘திரும்ப திரும்ப பண்ற நீ!’- மீண்டும் செல்போனை தட்டிவிட்டாரா சிவக்குமார்?

தனது செயலுக்கு சிவக்குமார் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது

ஹைலைட்ஸ்

  1. செல்ஃபி எடுத்த இளைஞரின் மொபைலை சிவக்குமார் முன்னர் தட்டிவிட்டார்
  2. அது பெரிய சர்ச்சையானது
  3. இதையடுத்து, தனது செயலுக்கு சிவக்குமார் மன்னிப்பு கேட்டார்

நடிகர் சிவக்குமார், சில மாதங்களுக்கு முன்னர் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, தன்னையும் சேர்த்து செல்ஃபி எடுத்த இளைஞரின் போனை தட்டிவிட்டார். இது பெரிய விவாதப் பொருளானது. 

குறிப்பாக, ‘ஒரு நடிகர் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?' என்றும், ‘அனுமதி இல்லாமல் முகத்துக்கு நேராக வந்து போட்டோ எடுத்தால் சும்மா இருப்பதா?' என்றும் நெட்டிசன்கள் பரபரக்கத் தொடங்கினர். 

அந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. அதைத் தொடர்ந்து தனது செயலுக்கு சிவக்குமார் மன்னிப்பு கேட்டார். இந்நிலையில் சிவக்குமார், மீண்டும் அது போன்ற ஒரு செயலில் ஈடுபட்டுள்ளார்.

தற்போதும் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிவக்குமாரை, ஒருவர் செல்ஃபி கேமரா மூலம் படம் எடுத்துள்ளார். இந்த செயலால் எரிச்சலடைந்த சிவக்குமார், சிரித்துக் கொண்டே போனை தட்டிவிட்டுள்ளார். 
 
NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................