மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பாடகி கனிகா கபூர்!

கனிகா கபூர் முழுமையான தனிமைப்படுத்தலுக்குச் செல்வதற்குப் பதிலாக. அவர் அலட்சியம் காட்டியதாக லக்னோவின் தலைமை மருத்துவ அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் பாடகி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பாடகி கனிகா கபூர்!

கனிகா கபூர் (courtesy kanik4kapoor)

ஹைலைட்ஸ்

  • Kanika Kapoor contracted the virus after returning from the UK
  • She was criticised for not going into quarantine after returning to India
  • Kanika Kapoor was being treated in Lucknow
New Delhi:

கடந்த மாதம் 9-ம் தேதி லண்டனிலிருந்து மும்பை வந்த கனிகா கபூர் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகளை கொண்டிருந்தார். ஆனால், தன்னை தனிமைப்படுத்திக்கொள்வதற்கு மாறாக அவர் லக்னோவில் ஒரு விருந்தில் கலந்துகொண்டார். இந்த விருந்தில் பல முக்கிய அரசியல்வாதிகள் கலந்துகொண்டிருந்தனர். இந்த நிலையில் முழுமையான தனிமைப்படுத்தலுக்குச் செல்வதற்குப் பதிலாக. அவர் அலட்சியம் காட்டியதாக லக்னோவின் தலைமை மருத்துவ அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் பாடகி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பின்னர் தனது சொந்த ஊரான லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எஸ்ஜிபிஜிம்ஸ்) அனுமதிக்கப்பட்டார். நான்கு முறை அவருக்கு செய்யப்பட்ட கொரோனா தொற்று பரிசோதனையில் நான்கு முறையும் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. ஏப்ரல் 4-ம் தேதி ஐந்தாவது முறையாகப் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு தொற்று இல்லை என்று தெரியவந்ததையடுத்து அவர் தற்போது மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார். 

முன்னதாக தனது இன்ஸ்டாகிரம் பதிவில், தான் லண்டனிலிருந்து திரும்பியதிலிருந்து தன் குடும்பத்தினரோடு தனிமைப்படுத்தலில் உள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். தான் திரும்பி வந்த போது, விமான நிலையத்தில் ஸ்கேன் செய்யப்பட்டதாகவும், அதன்பின் நான்கு நாட்களுக்கு பிறகே தொற்று அறிகுறிகள் தென்பட தொடங்கியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவர் மீது லக்னோவின் தலைமை மருத்துவ அதிகாரி அளித்த புகார் மற்றும், சமூக வலைத்தளங்களில் பலரால் விமர்சிக்கப்பட்டதால் தனது பதிவை நீக்கியிருந்தார். மருத்துவமனையில் கனிகாவின் நண்பரும் சகாவுமான சோனம் கபூர் உதவியிருந்தார்.

தன்னுடைய அடுத்த மருத்துவ பரிசோதனையில் முடிவுகள் தொற்று பாதிப்புக்கு எதிராக வரும் என தான் நம்புவதாக தெரிவித்திருக்கிறார். மேலும், தான் நன்றாக இருப்பதாகவும், தன்மீது அக்கறை செலுத்தியவர்களுக்கு நன்றியும் தெரிவித்திருந்தார். தான் இப்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் இல்லை என்பதனையும் குறிப்பிட்டிருந்தார். மேலும், தன் குழந்தைகளையும், குடும்பத்தையும் காணாமல் தான் துயருற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா தற்போது முழு முடக்க நடவடிக்கையின் இரண்டாவது வாரத்தில் உள்ளது. கிட்டதட்ட 3,500 அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

(With ANI inputs)

Listen to the latest songs, only on JioSaavn.com