This Article is From Nov 15, 2019

சாலை விபத்தில் உயிரிழந்த பிரபல திரைப்பட பாடகி! ரசிகர்கள் அதிர்ச்சி!!

அமெரிக்காவில் இசை நிகழ்ச்சியை முடித்து விட்டு இந்தியாவில் தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த கீதாவுக்கு விபத்து நேர்ந்தது.

சாலை விபத்தில் உயிரிழந்த பிரபல திரைப்பட பாடகி! ரசிகர்கள் அதிர்ச்சி!!

திரைப்பட பாடல்களை கீதா மாலி பாடியிருக்கிறார்.

Thane:

மகாராஷ்டிராவில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி பிரபல பின்னணி பாடகி கீதா மாலி உயிரிழந்திருப்பது அவர்களது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பல மராத்திய படங்களில் பாடல்களைப் பாடியுள்ள கீதா, வெளிநாடுகளிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த அவர் அங்கு இசை நிகழ்ச்சி நடத்தினார்.  
 

.

இந்த நிலையில் தனது அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று மதியம் இந்தியாவுக்கு திரும்பினார். பின்னர் தனது கணவருடன் சொந்த ஊரான நாசிக்கிற்று மும்பை - ஆக்ரா சாலை மார்க்கமாக காரில் சென்று கொண்டிருந்தார்.

மதியம் 3 மணியின்போது கீதா சென்ற கார் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கன்டெய்னர் லாரி மீது மோதி சுக்குநூறானது. இந்த சம்பவத்தில் கீதாவுக்கும், அவரது கணவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. 

இதன்பின்னர் இருவரும் சாபூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கீதா மாலி உயிரிழந்தார்.

.