உங்க லைஃப்ஸ்டைலில் இந்த மாற்றத்தை செய்யுங்க...பிளட் பிரஷரை ஈஸியா மேனேஜ் பண்ணலாம்

இரத்த அழுத்தத்தை மில்லிமீட்டர் மெர்க்குரி என்ற அளவில் தான் அளவிடப்படுகிறது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
உங்க லைஃப்ஸ்டைலில் இந்த மாற்றத்தை செய்யுங்க...பிளட் பிரஷரை ஈஸியா மேனேஜ் பண்ணலாம்

இரத்த அழுத்தத்தை சைலண்ட் கில்லர் என்று சொல்வதைப் பார்க்கலாம்.


ஹைலைட்ஸ்

  1. இரத்த அழுத்தத்தை மில்லிமீட்டர் மெர்க்குரி என்ற அளவில் குறிப்பிடப்படுகிறது
  2. இரத்த அழுத்தத்தைக் குறைக்க ஆரோக்கியமான உணவுமுறை மிகவும் அவசியம்.
  3. உடல் எடை குறைய அன்றாடம் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்

உயர் இரத்த அழுத்தம் அல்லது ஹைபர்டென்சன் அசாதாரணமான சூழலாகும். இரத்த அழுத்தம் கிட்டத்தட்ட எந்தவொரு அறிகுறிகளையும் காட்டுவதில்லை. இரத்த அழுத்தம் என்பது உறுதி செய்யப்பட்டு விட்டால் வாழ்வியல் முறை மாற்ற வேண்டியதற்கான அறிகுறியாக அதைக் கருத வேண்டும். இரத்த அழுத்தத்தை சைலண்ட் கில்லர் என்று சொல்வதைப் பார்க்கலாம். அதனால் இரத்த அழுத்தத்தை  தொடர்ச்சியாக பரிசோதித்து வர வேண்டியது மிகவும் அவசியம்.

இன்றைய காலத்தில் மக்கள் பலரும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். இரத்த அழுத்தத்தை மில்லிமீட்டர் மெர்க்குரி என்ற அளவில் தான் அளவிடப்படுகிறது. இரத்த அழுத்தத்தை கவனிக்காவிட்டால் உங்கள் உடல் நலத்தை வெகுவாக பாதிக்கும். மாரடைப்பு மற்றும் இதய நோய்களுக்கு வழி வகுக்கும். மருந்துகள் தவிர வாழ்க்கை முறையை மாற்றியமைப்பது மிகவும் அவசியம். சில எளிய வாழ்க்கை முறை மாற்றங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.

 

tl119udg
 
 
வாழ்க்கைமுறை மாற்றங்கள் உயர் இரத்த அழுத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவும் 

1. உடல் எடை 

 உடல் எடை அதிகரிக்கும் போது இரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது. அதனால், உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். அன்றாடம் உடற்பயிற்சி செய்வது மற்றும் ஆரோக்கியமான உணவு முறை உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவும். உடல் எடையை குறைத்தால் இரத்த அழுத்தம் மட்டுமல்ல பல உடல் உபாதைகளையும் குறைக்கிறது. 

 

2. உணவில் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும் 

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதிகப்படியான உப்பு எடுத்துக் கொள்வது  ஆபத்தாக அமையலாம். எடுத்துக் கொள்ளும் உணவில் சோடியத்தின் அளவுகுறைவாக இருப்பது மிகவும் அவசியம். சோடியம் இதயத்திற்கு கூடுதல் வேலைப்பளுவினைக் கொடுக்கும். இரத்தத்தை சுத்திகரித்து அனுப்புவதில் சிக்கலை உருவாக்கும். உப்புக்கு பதிலாக எலுமிச்சை அல்லது வினிகர், புதினா மிளகாய் ஆகியவற்றை மாற்றாக பயன்படுத்திக் கொள்ளலாம். 

 

3.  ஆல்ஹால் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும் 

அதிகப்படியான மது அருந்துதல் இரத்த அழுத்தத்தை உருவாக்கும். மது அருந்துவதைக் குறைத்துக் கொண்டால் இரத்த அழுத்தமும் குறையும். சின்னச்சின்ன வாழ்க்கை முறை மாற்றங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். 

 

4. ஆரோக்கியமான உணவுமுறை 

இரத்த அழுத்தத்தைக் குறைக்க ஆரோக்கியமான உணவுமுறை மிகவும் அவசியம். உணவின் ஒரு பகுதியாக ஃபுருட்ஸ், வெஜிடெபிள்ஸ்,  குறைவான கொழுப்பு கொண்ட பால் பொருட்கள் மற்றும் தானியங்கள் இருப்பதும் அவசியம்.  ஜங்க் புட் மற்றும் புராசஸஸ் செய்யப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. 

 

5. உடற்பயிற்சி

உடல் எடை குறைய அன்றாடம் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக்  கொள்ள வேண்டும். நடை பயிற்சி அல்லது சைக்கிளிங் என்று ஏதேனும் ஒன்றை 30 நிமிடம் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். நீச்சல், ஓட்டம் அல்லது யோகா என ஏதேனும் ஒன்றையும் செய்யலாம். 

 

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.

 

 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................