This Article is From Sep 20, 2018

சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

309 காலிப்பணியிடங்களுக்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

New Delhi:

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் நடத்தும் (TNUSRB) சப் இன்ஸ்பெக்டர் (டெக்னிக்கல்) தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன. இதனை tnusrbonline.org என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வு 3 மணி நேரம் நடைபெறும். வெற்றி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் 28-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொள்குறி (OBJECTIVE) வகையிலான 160 கேள்விகள் இதில் இடம்பெறும்.

எழுத்துத் தேர்வில் மொத்தம் 80 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. இவற்றில் 30 மதிப்பெண்கள் பொது அறிவு பகுதியாகும். மீதமுள்ள 50 மதிப்பெண்கள் டெக்னிக்கல் பகுதியில் இருந்து கேட்கப்படும்.

கல்வி தகுதிக்கு 5 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.

VIVA VOCE தேர்வுக்கு 10 மதிப்பெண்கள் வழங்கப்படும். என்.சி.சி., என்.எஸ்.எஸ்., விளையாட்டுப் பிரிவில் சாதனை படைத்தவர்களுக்கு 5 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும்.

தேர்வு முடிந்தபின்னர் முதல்கட்ட தேர்வுக்கான விடையை TNUSRB வெளியிடும். இதில் ஏதும் ஆட்சேபனைகள் இருந்தால் போட்டியாளர்கள் அடுத்த 7 நாட்களுக்குள் தெரிவிக்கலாம்.

மொத்தம் 309 காலிப்பணியிடங்களுக்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான ஆன்லைன் பதிவுகள் கடந்த ஜூலை – ஆகஸ்டில் நிறைவு பெற்றன.

 

.