தீவிரவாதிகளின் சடலங்களை காட்டுங்கள்! - ஆதாரம் கேட்கும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர்!

பாலக்கோட் தாக்குதல் நடந்ததற்கு நம்பும்படியான ஆதாரங்களை காட்ட வேண்டும் என உயிரிழந்த இரண்டு ராணுவ வீரர்களின் உறவினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS

160 டாலராக இருந்த விசா கட்டணத்தை 192 டாலராக உயர்த்தியுள்ளது.


ஹைலைட்ஸ்

  1. தீவிரவாதிகளின் சடலங்களை காட்டினால் தான் நம்புவோம்.
  2. ஆதாரம் கேட்கும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர்.
  3. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து உரிய அறிவிப்பு இல்லை.

ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த இரண்டு ராணுவ வீரர்களின் குடும்பத்தினர், பாகிஸ்தானில் இந்திய விமானப் படையினர் தாக்குதல் நடத்தியது தொடர்பான ஆதாரங்களையும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

கடந்த பிப்.14ஆம் தேதி புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதைத்தொடர்ந்து இந்திய விமானப்படைகள் பாகிஸ்தான் எல்லைக்கோட்டு பகுதியில் புகுந்து பாலக்கோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது மிகப்பெரிய தீவிரவாத பயிற்சி முகாமை முற்றிலும் அளித்ததாக கூறப்பட்டது. 

ஆனால் இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை விவரம் குறித்து வெளியுறவு செயலர் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதேமசயம் விமானப் படையினரின் தாக்குதலில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே விமானப் படையினரின் தாக்குதலில் 350 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியானது. இதனையடுத்து 350 பயங்கரவாதிகளை விமானப் படையினர் கொன்றதற்கான ஆதாரம் என்ன என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியது. இதற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்தார். 

இந்நிலையில் விமானப் படை தாக்குதலில் உயிரிழந்த தீவிரவாதிகளின் சடலங்களை காட்ட வேண்டும் என்றும் அதுவரையில் விமானப் படை தாக்குதலை நம்பப் போவதில்லை என்றும் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களான ஷாம்லியை சேர்ந்த பிரதீப் குமார் மற்றும் மணிப்பூரியை சேர்ந்த ராம் வாகீல் உள்ளிட்ட இரண்டு பேரின் குடும்பத்தினரும் தெரிவித்துள்ளனர்.

fhmh8rgo

இதுகுறித்து, வீரமரணம் அடைந்த சிஆர்பிஎஃப் வீரர் ராம் வாகீல் சகோதரி கூறும்போது, புல்வாமா தாக்குதல் நடந்த போது, நாங்கள் உயிரிழந்தவர்களின் கைகள், கால்கள் மற்றும் உடல்களை பார்த்தோம், இதற்கு ஆதாரங்கள் தேவையில்லை. இந்த தாக்குதலுக்கு தீவிரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்றது. ஆனால், பாகிஸ்தானில் இந்திய பதில் தாக்குதல் நடத்தியது என்கிறது. தாக்குதல் நடத்தியது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

ஆனால், அது எங்கு நடந்தது? அதற்கான ஆதாரங்கள் எதையாவது காட்டினால் தானே நம்ப முடியும். இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் தங்களுக்கு எந்த சேதாரமும் இல்லை என்கிறது பாகிஸ்தான். அப்படி இருக்கும் போது நாங்கள் எப்படி நம்ப முடியும்? இறந்தவர்களின் சடலங்களை கண்முன்னே காட்டுங்கள்.

நாங்கள் நிம்மதி அடைவோம் என்று அவர் கூறினார். இதேபோல், ஷமாலியில் பிரதீப் குமாரின் தாயார் கூறும்போது, ஏராளமான மகன்களை இழந்துள்ளோம். பாகிஸ்தான் தரப்பில் ஒருவர் உயிரிழந்ததை கூட நாங்கள் பார்க்கவில்லை. அது உறுதியான செய்தியா என்பது கூட தெரியிவில்லை. உயிரிழந்த தீவிரவாதிகளின் சடலகங்களை காட்டுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................