This Article is From Oct 16, 2018

எம்.ஜே. அக்பர் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தும் சிவசேனா

முன்னாள் பத்திரிகைய ஆசிரியரும் மத்திய வெளியுறவு இணை அமைச்சருமான எம்.ஜே. அக்பருக்கு எதிராக பலர் பாலியல் புகார் அளித்துள்ளனர்

எம்.ஜே. அக்பர் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தும் சிவசேனா

தன்மீதான குற்றச்சாட்டுகளை எம்.ஜே. அக்பர் நிராகரித்துள்ளார்.

Mumbai:

எம்.ஜே. அக்பருக்கு எதிராக பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் கூட்டணி கட்சியான சிவசேனாவும் தன் பங்குக்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் நாளிதழான சாம்னா தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது-

2014 மக்களவை தேர்தலுக்கு முன்பாக பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை பாஜக அளித்தது. அதில், அனைத்து மக்களுக்கும் உணவு, உடை, இருப்பிடம் அளிப்பதோடு நாட்டை ஒழுக்கமான நாடாக மாற்றுவோம் என்றும் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறையில் ஈடுபடுவர்கள் எல்லாம் பாஜகவின் அமைச்சரவையிலேயே இடம் பெற்றிருக்கிறார்கள். அதே நேரத்தில் குடிப்பழக்கத்தை ஊக்கப்படுத்தும் நடவடிக்கையிலும் மகாராஷ்டிராவின் பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தனக்கு எம்.ஜே. அக்பர் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக 10-க்கும் அதிகமான பெண் பத்திரிகையாளர்கள் புகார் கூறியுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள எம்.ஜே. அக்பர் இதற்கு எதிராக அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளார்.

இந்த விவகாரத்திற்கு பொறுப்பேற்று அக்பர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கு பதில் அளித்துள்ள அக்பர் பதவி விலக வேண்டும் என்கிற அவசியம் தனக்கில்லை என்று கூறியுள்ளார்.

.