This Article is From Nov 27, 2019

காங்கிரஸ் கூட்டணியில் உடன்பாடில்லை: சிவசேனா நிர்வாகி ராஜினாமா!

ஒருநாளும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க என்னுடைய சிந்தாந்தமும், மனமும் இடம் கொடுக்கவில்லை.

காங்கிரஸ் கூட்டணியில் உடன்பாடில்லை: சிவசேனா நிர்வாகி ராஜினாமா!

பாலாசாஹேப் தாக்கரேவின் சிவசேனா என்றும் என் மனதில் இருக்கும் என சோலாங்கி கூறியுள்ளார்

Mumbai:

மகாராஷ்டிராவில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கிறது என்றும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்பார் என்றும் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, சிவசேனா நிர்வாகி ஒருவர் ராஜினாமா செய்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தற்போது ஆட்சியமைக்க சிவசேனா கட்சி காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்தச் சமயத்தில் மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியிலிருந்து முதலமைச்சர் வரவுள்ளது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. 
 


ஆனாலும் ஒருநாளும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க என்னுடைய சிந்தாந்தமும், மனமும் இடம் கொடுக்கவில்லை. அதனால், தொடர்ந்து, முழு மனதுடன் என்னால் எனது பணியை மேற்கொள்ள முடியாது. ஆகவே என்னுடைய கட்சிப் பதவியை ராஜினாமா செய்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

பாலாசாஹேப் தாக்ரே சிவசேனா கட்சியின் தலைவராக இருந்த போது நான் சிவசேனா கட்சியில் இணைந்தேன். அப்போது இருந்து கடந்த 21ஆண்டுகளாக சிவசேனா கட்சிக்காக தீவிரமாக உழைத்தேன். 
பாலாசாஹேப் தாக்கரேவின் சிவசேனா என்றும் என் மனதில் இருக்கும் என சோலாங்கி கூறியுள்ளார். 

மகாராஷ்டிராவில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கிறது. தொடர்ந்து, நாளைய தினம் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நாளை முதல்வராக பதவியேற்கிறார்.

இந்நிலையில், மகாராஷ்டிரா முதல்வராவேன் என கனவில் கூட நினைத்தது இல்லை என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உருக்கமாக தெரிவித்துள்ளார். இதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 
 

.