சசி தரூரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த நிர்மலா சீதாராமன்!

காங்கிரஸ் எம்.பி.யாக இருமுறை போட்டியிட்டு, வெற்றிபெற்ற சசி தரூர், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கோவிலில் பிரர்த்தனை செய்து கொண்டிருந்த போது கீழே விழுந்து காயமடைந்தார்.

காங்கிரஸ் தலைவர்கள் மீது கசப்புணர்வை வெளிப்படுத்தும் நிர்மலா சீதாராமன் இந்த புகைப்படத்தில் புன்னகைக்கிறார்.

ஹைலைட்ஸ்

  • "Civility is a rare virtue in politics," Shashi Tharoor tweeted
  • Mr Tharoor was injured when a heavy iron hook fell on him
  • He was admitted to Government Medical College in Thiruvananthapuram
Thiruvananthpuram:

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கோவிலில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர், கீழே விழுந்து காயமடைந்தார். இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மருத்துவனையில் நேரில் சென்று நலம் விசாரித்தார். அப்போது, சசி தரூர்க்கு கைகொடுத்த நிர்மலா சீதாராமன் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து சசி தரூர் தனது டிவிட்டர் பதிவில், மரியாதை அரசியலில் ஒரு அரிய நல்லொழுக்கம் என்று பாஜக தலைவர் நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் உடல் நலம் விசாரித்தது தொடர்பான புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். மேலும் அதில், இன்று காலை நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் என்னை சந்தித்து நலம் விசாரித்தார். இதன் மூலம் அவர் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கிறார்.

ரஃபேல் ஊழல் வழக்கு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நிர்மலா சீதாராமன் கடுமையாக விமர்சித்து வரும் சூழ்நிலையில், புன்னகையுடன் காணப்பட்டார்.


 

திருவனந்தபுரம் தொகுதி மக்களவை உறுப்பினரும் மத்திய முன்னாள் அமைச்சருமான சசி தரூர், நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள கோவிலில் தனது எடைக்கு எடை பழங்களை நேர்த்திக்கடனாக செலுத்தி துலாபாரம் செலுத்த வந்திருந்தார். அப்போது, துலாபாரம் தராசின் ஒரு பக்கத்தில் பழங்கள் அடுக்கி வைக்கப்பட, மற்றொரு தட்டில் சசி தரூர் அமர்ந்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தராசு முள்ளில் மேல்பகுதியில் இருந்த கனமான இரும்பு கொக்கி சசி தரூர் தலையின் மீது வேகமாக விழுந்தது.

எதிர்பாராத இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்து நிலைகுலைந்த சசி தரூர் தடுமாறியவாறு கீழே விழுந்தார். இதில் அவரது தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தலையில் 6 தையல் வரை போடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தொடர்ந்து மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்ட அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். பின்னர் அவர் தனது பிரச்சாரத்தை தொடர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.