மத்திய பிரதேச அங்கன்வாடியில் 5 வயது குழந்தை உயிரிழப்பு

அங்கன்வாடியில், கொதிக்கும் கடாயில் விழுந்த 5 வயது பெண் குழந்தை, பரிதாபமாக உயிரிழந்துள்ளது

 Share
EMAIL
PRINT
COMMENTS
மத்திய பிரதேச அங்கன்வாடியில் 5 வயது குழந்தை உயிரிழப்பு
Shahdol (Madhya Pradesh): 

மத்திய பிரதேசத்தில் உள்ள அங்கன்வாடியில், கொதிக்கும் கடாயில் விழுந்த 5 வயது பெண் குழந்தை, பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

சாதோல் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி பள்ளி ஒன்றில், மதிய உணவி தயாரிக்கப்பட்டு கொண்டிருந்தது. அங்கன்வாடியில் உள்ள உதவி பணியாளர் வேறு அறையில் வைக்கப்பட்டிருக்கும் அரிசி மூட்டையை எடுத்து வரச் சென்றுள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக சமையல் அறைக்குள் நுழைந்த 5 வயது குழந்தை, கொதிக்கும் கடாயினுள் தவறுதலாக விழுந்துள்ளார். அதனை கண்ட அங்கன்வாடி பணியாளர்கள், குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

எனினும், உடற் காயங்கள் தீவிரமாக இருந்ததால், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்துமாறு சாதோல் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................