West Delhi's Peera Garhi: தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, அங்கு வெடி விபத்தும் ஏற்பட்டுள்ளதாக தகவல்.
ஹைலைட்ஸ்
- Building collapses in west Delhi, many including firefighters trapped
- Factory building collapsed after it caught fire in Peera Garhi area
- Chief Minister Arvind Kejriwal said he's closely monitoring the situation
New Delhi: மேற்கு டெல்லியின் பீரகார்கியில் உள்ள பேட்டரி தொழிற்சாலையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், அங்கு வெடி விபத்து ஏற்பட்டது. இதில், கட்டடிடம் சரிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் தொழிலாளி ஒருவர் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, சம்பவ இடத்தில் 35 தீயணைப்பு வாகனங்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. தேசிய பேரிடர் மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்து குறித்து தீயணைப்பு படையினருக்கு அதிகாலை 4.30 மணி அளவில் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, முதலில் 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் தொழிற்சாலையில் இருந்த பேட்டரிகள் கடுமையாக சூடானதால் காலை 9 மணி அளவில், கட்டிடத்தின் பின்பக்கத்தில் வெடி விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால், கட்டிடம் சரிந்து விழுந்துள்ளது.
இதுதொடர்பாக வெளியான வீடியோக்களில், தொழிற்சாலையில் இருந்து கரும்புகை வெளியேறுவதைக் காணலாம். பேட்டரிகள் எறிந்து வரும் புகையில் கடும் நச்சுத்தன்மை உள்ளதால் மிகுந்த எச்சரிக்கையுடன் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். மேலும், கட்டிடத்தில் இருந்து எரியக்கூடிய பொருட்களை அகற்றியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளார். இந்த விபத்து சம்பவத்தை அறிந்து மிகவும் கவலையடைந்தேன். தீயணைப்பு வீரர்கள் தங்களால் முயன்ற அளவு முயற்சித்து வருகிறார்கள். இந்த விபத்தில் சிக்கியவர்கள் பாதுகாப்பாக மீண்டு வர வேண்டிக்கொள்கிறேன் என்று அவர் கூறினார்.