கீழே கிடந்த ரூ.50,000 ஒப்படைத்த 7 வயது மாணவனுக்கு குவியும் பாராட்டு மழை!

ஈரோட்டைச் சேர்ந்த 7 வயது மாணவன் கட்டுக் கட்டாக பணம் இருந்தப் பையை பத்திரமாக தன் ஆசிரியரிடம் ஒப்படைத்துள்ளான்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
கீழே கிடந்த ரூ.50,000 ஒப்படைத்த 7 வயது மாணவனுக்கு குவியும் பாராட்டு மழை!
Erode: 

ஈரோட்டைச் சேர்ந்த 7 வயது மாணவன் கட்டுக் கட்டாக பணம் இருந்தப் பையை பத்திரமாக தன் ஆசிரியரிடம் ஒப்படைத்துள்ளான். இதனால், அந்த சிறுவனுக்கு பாராட்டு மழை குவிந்து வருகிறது.

முகமது யாசின், ஈரோட்டில் இருக்கும் சின்னமேசூர் பஞ்சாயத்து பள்ளியில் இரண்டாம் வகுப்புப் படித்து வருகிறான். நேற்று 11 மணியளவில் பள்ளிக்கு இடைவெளி விடப்பட்டுள்ளது. அப்போது பள்ளிக்கு வெளியே சென்ற முகமது, கீழே கிடந்த ஒரு பையைப் பார்த்து எடுத்துள்ளான். பையின் உள்ளே கட்டுக் கட்டாக பணம் இருந்துள்ளது. அதை அப்படியே எடுத்து சென்று தனது ஆசிரியரியையிடம் தந்துள்ளான் முகமது. 

அந்த ஆசிரியை, முகமது மற்றும் பணப் பையை தலைமை ஆசிரியரிடம் கொடுத்துள்ளார். அவர் எஸ்.பி சக்தி கணேஷிடம் சிறுவனையும் பையையும் ஒப்படைத்துள்ளார். 

முகமதுவின் இந்த நேர்மையைப் பாராட்டி, அவனுக்குத் தேவையான சில பொருட்களை போலீஸ் தரப்பிலிருந்து வாங்கிக் கொடுத்துள்ளனர். மேலும், வரும் 19 ஆம் தேதி மாவட்ட அளவிலான போலீஸ் சந்திப்பின் போது, முகமதுவின் நேர்மையைப் போற்றும் விதத்தில் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் எஸ்.பி. சக்தி கணேஷ் கூறியுள்ளார்.

இந்த விஷயம் குறித்து போலீஸ், ‘இந்தப் பணம் யாருக்கு சொந்தமாக இருக்கிறதோ, அவர்கள் அதற்கான ஆதாரத்தை சமர்பித்து வாங்கிக் கொள்ளலாம்’ என்று தெரிவித்துள்ளது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................