முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை - இலங்கையில் ஃபேஸ்புக், வாட்ஸப்புக்கு தடை விதிப்பு!!

சமூக வலை தளங்களில் பரவிய செய்திகளால் முஸ்லிம்களும் அவர்களது சொத்துக்களும் தாக்குதலுக்கு ஆளானது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை - இலங்கையில் ஃபேஸ்புக், வாட்ஸப்புக்கு தடை விதிப்பு!!

ஈஸ்டர் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து முஸ்லிம்களும், அவர்களது கடைகளும் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றன.


Colombo: 

இலங்கையில் சமூக வலைதளங்களில் பரவிய தகவல்களால் அங்கு முஸ்லிம்கள் மீதும், அவர்களது சொத்துக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து ஃபேஸ்புக், வாட்ஸப் போன்ற சமூக வலை தளங்களுக்கு இலங்கை அரசு தற்காலிக தடை விதித்திருக்கிறது. 

ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் 300-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். அது முதற்கொண்டு இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடந்து வருகின்றன. 

ஃபேஸ்புக்கில் அப்துல் ஹமீது முகமது ஹஸ்மார் என்பவர் ஒரு நாள் நீங்கள் அழுவீர்கள் என்று போஸ்ட் செய்துள்ளார். இதன் தொடர்ச்சியாக எழுந்த பின்னூட்டங்கள் மற்றும் ஷேர்ஸ் விளைவாக பள்ளி வாசல்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன. இதேபோன்று வெறுப்பை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துகள் ஷேர் செய்யப்பட்டதால் இலங்கையில் பதற்றம் காணப்படுகிறது. 

குரங்கெளா மாவட்டத்தில் நடந்த தாக்குதல்களில் சில மசூதிகள் சேதம் அடைந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களுக்கு இலங்கையில் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும்வரையில் இந்த தடை நீடித்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் 2019 – யின் சமீபத்திய தேர்தல் செய்திகள், லைவ் அப்டேட்ஸ் மற்றும் தேர்தல் அட்டவணையை ndtv.com/tamil/elections –யில் பெறுங்கள். 2019 பொது தேர்தலின் 543 தொகுதிகள் அப்டேட்களை பெற Facebook மற்றும் Twitter பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................