This Article is From Feb 25, 2019

நிறவெறியுடன் வரையப்பட்டதா செரினா வில்லியம்ஸின் கார்ட்டூன்?

பெரிய உதடுகள், மூக்குடன் அவரது ஹேர் ஸ்டைலையும் கிண்டல் செய்து வரையப்பட்டுள்ள அந்த படம் குரங்கை போல சித்தரிக்கப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நிறவெறியுடன் வரையப்பட்டதா செரினா வில்லியம்ஸின் கார்ட்டூன்?

மெல்பெர்ன் ஹெரால்டு சன் இல்லஸ்ட்ரேட்டர் மார்க் நைட் தனது கார்ட்டுனில் பெரிய உதடுகளுடன் கோபத்தை வெளிப்படுத்தும் செரினாவை வரைந்துள்ளார்.

ஆஸ்திரேலிய செய்தித்தாள் ஒன்று செரினா வில்லியம்ஸ் குறித்து வெளியிட்டுள்ள கார்ட்டூன் சர்ச்சையாகியுள்ளது. இது நிறவெறி மற்றும் பாலியல் சீண்டலை குறிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. 

மெல்பெர்ன் ஹெரால்டு சன் இல்லஸ்ட்ரேட்டர் மார்க் நைட் தனது கார்ட்டுனில் பெரிய உதடுகளுடன் கோபத்தை வெளிப்படுத்தும் செரினாவை வரைந்துள்ளார். இது ஒசகாவுடன் தோற்றவுடன் அமெரிக்க ஓப்பனில் அவர் வெளிப்படுத்திய ஆக்ரோஷமாகும்.

இந்த சர்ச்சை உலகம் முழுவது பரவ பலதரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர் சங்கம் இது குறித்த புகாரை பெற்றுள்ளது. இந்த கார்டூன் குறித்து விளக்கமளிக்குமாறு சொல்லப்பட்டுள்ளது. 

பெரிய உதடுகள், மூக்குடன் அவரது ஹேர் ஸ்டைலையும் கிண்டல் செய்து வரையப்பட்டுள்ள அந்த படம் குரங்கை போல சித்தரிக்கப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பத்திரிக்கை நிறுவனம் அவரது கள நடவடிக்கையை சித்தரித்ததாக மட்டுமே கூறியுள்ளது. மேலும் செரினாவை தவறாக சித்தரிக்கவில்லை என்று கூறியுள்ளது. கவுன்சிலும் கார்டூன் தனது கருத்தை தெரிவித்துள்ளது என்று கூறியுள்ளது. மேலும் செரினாவை குரங்குபோல சித்தரிக்கவில்லை என்று கூறியுள்ளது. 

ஆனாலும் சில வாசகர்களின் மனவருத்தம் அடைந்தது மதிக்கத்தக்கதே. இது அமெரிக்க ஓப்பன் குறித்த அவமானம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

23 முறை க்ராண்ட்ஸ்லாம் வென்ற செரினா அமெரிக்க ஓப்பனில் தோற்றதும் களத்தில் ஆக்ரோஷமாக நடந்துகொண்டார். அவரது செயல் வைரலானது. அதையே கார்ட்டூனாக்கியதாக நைட் தெரிவித்தார். இது அவரது நடைமுறை பற்றியதே தவிர. நிறவெறி பற்றியதல்ல என்றார்.