This Article is From Nov 21, 2018

காங்கிரஸ் மூத்த தலைவர் எம்.ஐ. ஷாநவாஸ் காலமானார்

சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஷாநவாஸ் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 67.

காங்கிரஸ் மூத்த தலைவர் எம்.ஐ. ஷாநவாஸ் காலமானார்

நீண்ட நாட்களாக ஷாநவாஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

New Delhi:

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான எம்.ஐ. ஷாநவாஸ் சென்னையில் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 67.

கேரளாவை சேர்ந்த ஷாநவாஸ் வயநாடு மக்களவை தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு 2 முறை தேர்வு செய்யப்பட்டவர். கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு அதற்கு நீண்ட நாட்களாக ஷாநவாஸ் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த 2-ம் தேதிதான் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன்பின்னர் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று நள்ளிரவு 1 மணிக்கு உயிர் பிரிந்தது.

அவரது உடல் கொச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு இறுதி சடங்குகள் நடைபெறுகின்றன. ஷாநவாஸின் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கேரள காங்கிரசின் செயல் தலைவராக இருந்து வந்த ஷாநவாசுக்கு மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோர் உள்ளனர்.

.