‘மு.க.ஸ்டாலின் ஒரு இலவு காத்த கிளி!’- அமைச்சர் செல்லூர் ராஜு கேலி

"ஸ்டாலின், இலவு காத்த கிளி போல, திண்ணை எப்போது காலியாகும் என்று காத்துக் கிடக்கிறார்"

 Share
EMAIL
PRINT
COMMENTS
‘மு.க.ஸ்டாலின் ஒரு இலவு காத்த கிளி!’- அமைச்சர் செல்லூர் ராஜு கேலி

"கடைசி வரை ஸ்டாலின் கனவு நிறைவேறாது”


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் பதவி எப்போது காலியாகும் என்று இலவு காத்த கிளி போலத்தான் காத்துக் கிடக்கிறார் என்று தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு கேலி செய்யும் விதத்தில் பேசியுள்ளார். 

சென்னை, கீழ்ப்பாக்காத்தில், பொது விநியோகம் குறித்த தரவுகளுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார். ஆய்வுக் கூட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நிருபர்கள் சிலர், “திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறாரே..?” என்று கேள்வியெழுப்பினார்கள்.

அதற்கு அமைச்சர், “அவர் எப்போது முதல்வரைப் பாராட்டிப் பேசியிருக்கிறார். இப்போது பேசுவதற்கு. ஸ்டாலின், இலவு காத்த கிளி போல, திண்ணை எப்போது காலியாகும் என்று காத்துக் கிடக்கிறார். திண்ணை கடைசி வரை காலியாகாது என்பது அவருக்குத் தெரியாது. கடைசி வரை ஸ்டாலின் கனவு நிறைவேறாது” என்று கேலி செய்துள்ளார். 


 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................